மனோன்மணீயம்
21

புழிப் புனைந்து, ‘’நன்மணம் புணர்தலே’’ முடிவாகக் கொண்டு, ‘’மந்திரம் தூது செலவிகல் வென்றி’’ எனச் சந்தியிற் றொட்ர்ந்து, ‘’அங்கம் களம்’’ என்னும் பாகுபாடுடைத்தாய் நிற்கும் இந் நாடகத்தில் தமிழ் காவிய வுறுப்புகள் பற்பல ஆங்காங்கு வருவித்திருப்பதும் அன்பொடு பார்ப்போர் கண்ணுக்குப் புலப்படலாம்.

15. இல்லறம் துறவறம் பத்தி ஞான முதலிய மோக்ஷ சாதனங்கள் பொருத்தமுடைய சந்திகளில் வெளிப்படையாக அமைந்திருப்பதுமல்லாமல் இக்கதையினையே ரூபகமாலாலங்காரமாகக் கருதில், தத்துவ சோதனை செய்யும் முமூக்ஷு க்களுக்கு அனுகூலமாகப் பவிக்கவும் கூடும். அப்படி உருவக மாலையாகக் கொள்ளுங்கால், ஜீவகனைச் சார்போதமான ஜீவாத்மா ஆகவும், அவனைத் தன் வசப்படுத்தி யாட்டுவித்த குடிலனை மாயா சக்தியாகவும், மனோன்மணியை ஜீவாத்மாவின் பரிபக்குவ காலத்துதிக்கும் முத்திக்குரிய உத்தம பாகமான சுத்த தத்துவமாகவும், அவள் தோழி வாணியைப் புத்திதத்துவமாகவும், அவள் காதலனாகிய நடராஜனை ஞானதாதாவான உபாசனா மூர்த்தியாகவும், புருடோத்தமனை அனுக்கிரஹ சக்தியாகவும், சுந்தரமுனிவரைக் கருணாநிதியாகிய ஞானாசாரியராகவும், ஜீவகனுக்குத் தலைநகராகக் கூறிய முத்திபுரம் என்னும் மதுரையை ஜீவாத்மா வுதித்தொடுங்கும் மூல ஸ்தானமாகவும், அவனும் குடிலனும் சேர்ந்து கட்டிய நெல்வேலிக் கோட்டையை மாயாகாரியமான அன்னமயாதி பஞ்சகோசத்தாலமைந்த சாரீமாகவும், அதிலிருந்து மனோன்மணி கண்ட கனாவைச் சுந்தாந்தக்கரண ஜநிதமான பரோக்ஷ ஞானமாகவும், சேரதேசத்தில் புருடோத்தமன் கண்ட கனாவை பரமபசுபதியான ஈசுவரனது அருளின் ஸ்புரணமாகவும், மனோன்மணியும் புருடோத்தமனும் சந்திக்கக் காரணமாக முடிந்த முனிவர் கட்டிய சுருங்கையை பிரத்யாக்ஷானுபூதிக் கேதுவான பாச விமோசன பந்தாவாகவும், பிறவும் இம் முறையே பாவித்து உய்த்துணர்ந்துகொள்ள வேண்டியது.

16. ஏறக்குறைய வாசக நடைக்குச் சமமான அகவற்பாவால் இந்நாடகம் பெரும்பாலும் ஆக்கப்பட்டிருக்கிறதினால் ஒருவர் மொழியாக வரும் ஒரு வரியில் அகவல் அடியும் முடியாவிடங்களில் அடுத்த வரியில் வரும் சீரோடும் சேர்த்து ஆசிரிய அளவடி யாக்கி முடித்துக்கொள்க.