மனோன்மணீயம்
8

அவர்கள் தூண்டுதலின்மேல் இலண்டனிலுள்ள வரலாற்றாராய்ச்சிக் கழகத்தார் (Royal Historical Society) இவருக்கு F.R.H.S. என்னும் பட்டத்தையும், ஆசியாத் தொடர்பான ஆராய்ச்சிக் கழகத்தார் (Royal Asiatic Society) M.R.A.S. என்னும் பட்டத்தையும் வழங்கி இவரைப் பெருமைப்படுத்தினர். இவர் செய்த தென்னிந்திய வரலாற்றாராய்ச்சியின் திறமையைக் கண்ட சென்னை அரசியலார், 1896-ம் ஆண்டில் 'ராய்பகதூர்' என்னும் பட்டத்தை இவருக்கு அளித்தனர். 1891-ம் ஆண்டில் இவரைச் சென்னைப் பல்கலைக்கழகத்தர் பல்கலைக் கழக உறுப்பினர் (F.M.U.) ராக அமைத்துக் கொண்டனர். அதுமுதல் இவரைப் பல்கலைக் கழகத்தார் பல ஆண்டுகளில் தமிழ் (Tamil), வரலாறு (History), அறிவுநூல் (Philosophy) இவைகட்குத் தேர்வாளராக அமைத்துச் சிறப்பெய்துவித்தனர். திருவிதாங்கூர் பண்டை யரசர் கால வாராய்ச்சி எழுதும்பொருட்டுப் பிள்ளையவர்கள் எடுத்துக்கொண்ட பேருழைப்பை நன்குணர்ந்த மாட்சிமிக்க திருவிதாங்கூர் அரசர் பெருமான் அக்கால முதற்கொண்டே பிள்ளையவர்களின் ஒரே புதல்வரான திருவாளர் நடராஜ பிள்ளை அவர்கட்குத் திங்கள்தோறும் ரூபாய் இருபது நன்கொடையாக அளித்துவருகிறார்கள்.

1. சுந்தரம் பிள்ளையவர்கள், தம் இளமைக் காலத்தில், நாகபட்டினம் இயற்றமிழ் ஆசிரியராகிய, புத்தகக்கடை திருவாளர் நாராயணசாமிப் பிள்ளை அவர்களிடந் தமிழ்க் கல்வி பயின்றவர்கள். நாகை R.S. வேதாசலம் பிள்ளை (இப்பொழுது சுவாமி வேதாசலம் என்னும் மறைமலையடிகள்) அவர்களும் அவ்வாசிரியரிடத்தே தம் இளமைக் காலத்தில் தமிழ்க் கல்வி பயின்றவர்கள். சுந்தரம் பிள்ளையவர்களியற்றிய 'மனோன்மணீயம்' என்னும் நாடகக் காப்பியத்தை, திருவாளர் வேதாசலம் பிள்ளை யவர்கள் கண்ணுற்று, சுந்தரம் பிள்ளையவர்கட்குத் தம்மைப்பற்றியும் தம் ஆசிரியர் நாராயணசாமிப் பிள்ளையவர்களைப் பற்றியும் 1895-ம் ஆண்டில் ஒரு கடிதம் அகவற் பாவில் வரைந்து விடுத்தார்கள். அதனைக் கண்டு இறும்பூதுற்ற சுந்தரம் பிள்ளை யவர்கள் ஆசி


1. மறைத்திரு சுவாமி வேதாசலம் அவர்கள் எழுதிய சிந்தனைக் கட்டுரையினின்றும் எடுக்கப்பட்டது.