மனோன்மணீயம்
7

இந் 'நூற்றொகை விளக்கம்' வெளிவந்த மூன்றாவதாண்டாகிய 1891-ம் ஆண்டு மார்ச்சுத்திங்களில், மனோன்மணீயம் வெளிவரலாயிற்று. அக்காலத்தில் வெளிவந்த தமிழ்நூல்களில் மனோன்மணீயம் முன் அணியில் வைக்குந் தகுதியுடைய தென்பதற்கு (Rev. Dr. G. U. Pope M.A., D.D.)டாக்டர் ஜி.யு. போப் துரையவர்கள், ஆசிரியர் P.அரங்கநாத முதலியாரவர்கள் M.A.,சி.வை. தாமோதரம் பிள்ளையவர்கள் B.A., B.L.,முதலானவர்கள் தந்த மதிப்புரைகளே தக்க சான்றாகும். இக்காலத்தில், பிள்ளையவர்கள்(Madras Christian College Magazine)சென்னைக் கிறித்துவ கலாசாலைத் திங்கள் இதழில் பத்துப்பாட்டு என்னும் பொருள்பற்றியும், ஞானசம்பந்தர் காலவாராய்ச்சி (The Age of Gnanasambandar)என்னும் பொருள் பற்றியும், ஆங்கிலத்திற் சில கட்டுரைகள் எழுதி வந்திருக்கிறார்கள். பின் 1894-ம் ஆண்டில், திருவிதாங்கூர் பண்டைமன்னர் காலவாராய்ச்சிக் கட்டுரைகளும் மேற்குறித்த திங்கள் இதழில் வெளியிடப்பட்டுப் பின் புத்தக உருவிலும் வெளிவந்தன. 1895-ம் ஆண்டில் திருஞானசம்பந்தர் காலவாராய்ச்சியும் புத்தக வடிவில் வெளிவந்தது. பிள்ளையவர்கள் செய்த ஞானசம்பந்தர் கால வரையறை, பின்னால் அதனைப்பற்றிப் பலரால் செய்யப்பட்ட ஆராய்ச்சிகளால் வலுப்பட்டதே யன்றி, ஒரு சிறிதும் மாறுதலடையாதிருந்தது பிள்ளையவர்களின் ஆராய்ச்சித் திறனுக்குச் சான்றாகும். இந்தியாவிலும், மேனாட்டிலும் மேற்குறித்த இரு ஆங்கில நூல்களையும் கற்ற அறிஞர்கள் அவைகளின் மேன்மைகண்டு புகழ்ந்து பாராட்டி எழுதியிருக்கிறார்கள். இந்நூல்களின் வழியாக அவர்களெல்லாரும் இவர்தம் நட்பிற்கு உரியரானார்கள். இவர் கல்வித் திறமையினை யறிந்த ஜெர்மனியிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தார் (Gottingham University)இவர் ஆறு திங்கள் அங்குப் போந்து அக் கலாசாலையில் தங்கியிருப்பாரானால் அறிவுநூற் பெரும்புலவர் (Doctor of Philosophy) என்ற பெரும் பட்டம் வழங்குவதாக வாக்களித்ததனாலேயே இவர்பால் மேற்கு நாட்டார் கொண்டிருந்த நன்மதிப்பு தெள்ளிதிற் புலனாம்.

சர் எம்.இ. கிராண்ட் டப் (Sir M.E. Grant Duff) என்ற சென்னை மாகாண அரசியற் றலைவர் (Governor of Madras)