பக்கம் எண் :

மனோன்மணீயம்
9

அனுபவித் தன்றோ வகலும்? மனையில்
தந்தையுங் கொடியன் ; தாயுங் கொடியள் !
35.சிந்தியார் சிறிதும் யான்படு மிடும்பை.
என்னுயிர்க் குயிரா மென்கா தலர்க்கும்
இன்ன லிழைத்தனர். எண்ணிய வெண்ணம்
முதலையின் பிடிபோன் முடிக்கத் துணிந்தனர்.
யாரோடு நோவேன்? யார்க்கெடுத் துரைப்பேன்?
40.வாாக்ட லுலகில் வாழ்கிலன்.
மாளுவன் றிண்ணம். மாளுவன் வறிதே. 8
மனோன், முல்லையின் முகையும் முருக்கி னிதழுங்
காட்டுங் கைரவ வாயாய் ! உனக்கும்
முரண்டேன்? பலதே வனுக்கே மாலை
45.சூடிடிற் கேடென்? காதால்
வள்ளையி னழகெலாங் கொள்ளைகொ ளணங்கே
வாணி, அம்மொழி வெம்மொழி. அம்ம ! ஒழிதி.
நஞ்சு மஞ்சிலேன் : நின்சொ லஞ்சினேன்.
இறக்கினு மிசையேன். தாமே துறக்கினும்
50.மறப்பனோ வென்னுள மன்னிய வொருவரை?
ஆடவ ராகமற் றெவரையும்
நாடுமோ நானுள வளவுமென் னுளமே? 10
மனோன், வலம்புரிப் புறத்தெழு நலந்திகழ் மதியென
வதியும் வதன மங்காய் ! வாணீ !
55.பேய்கொண் டனையோ? பித்தே றினையோ?
நீயென் நினைத்தனை? நிகரில் குடிலன்
தன்மக னாகிச் சாலவும் வலியனாய்
மன்னனுக் கினியனாய் மன்பல தேவனும்
உன்னுளங் கவர்ந்த வொருவனு மொப்போ?
60,பேய்கொண் டனையோ? பேதாய் !
வேய்கொள் தோளி விளம்பர யெனக்கே. 11
வாணி, அறியா யொன்றும், அம்ம ! அரிவையர்
நிறையழி காத னேருந் தன்மை.