பக்கம் எண் :

மனோன்மணீயம்
10

ஒன்றுங் கருதி யன்றவ ருள்ளஞ்
65.சென்று பாய்ந்து சேருதல். திரியுங்
காற்றும் பெட்புங் காரண மின்மையில்
ஆற்றவு மொக்குமென் றறைவர்.
மாற்றமென்? நீயே மதிமனோன் மணியே !
மனோன், புதுமைநீ புகன்றது, பூவைமார் காதல்
70.இதுவே யாமெனி லிகழ்தற் பாற்றே !
காதல் கொள்ளுதற் கேதுவு மிலையாம் !
தானறி யாப்பே யாட்டந் தானாம் !
ஆயினு மமைந்துநீ யாய்ந்துணர்ந் தோதுதி.
உண்டோ விவாத்மி லொப்பு?
75.கண்டோ வெனுமொழிக் காரிகை யணங்கே !
வாணி, ஒப்புயா னெப்படிச் செப்புவன்? அம்ம !
என்னுளம் போயிறந் ததுவே
மன்னிய வொருவன் வடிவுடன் பண்டே. 14
மனோன், பித்தே பிதற்றினை, எத்திற மாயினுந்
80.தாந்த முளத்தைத் தடைசெயி லெங்ஙனம்,
காந்தள் காட்டுங் கையாய் !
தவிர்ந்தது சாடி யோடிடும் வகையே? 15
வாணி, ஈதெலா முனக்குயா ரோதுதற் கறிவர் !
மாதர்க் குரியதிக் காதல்,
85.என்பதொன் றறியு மன்பதை யுலகே. 16
மனோன், மின்புரை யிடையாய் ! என்கருத் துண்மையில்
வனத்தி லெய்தி வற்கலை புனைந்து
மனத்தை யடக்கி மாதவஞ் செயற்கே.
சுந்தர முனிவன் சிந்துர அடியும்,
90.வாரிசம் போல மலர்ந்த வதனமும்,
கருணை யலையெறிந் தொழுகுங் கண்ணும்,
பரிவுடன் முகிழ்க்கு முறுவலும், பால்போல்
நரைதரு தலையும், புரையறு முரையும்,
சாந்தமுந் தயையுந் தங்கிய வுடலும்,