பக்கம் எண் :

மனோன்மணீயம்
11

95. மாந்தளிர் வாட்டு மேனி வாணி !
எண்ணுந் தோறுங் குதித்து
நண்ணு மென்னுளம் மன்னிய தவத்தே. 17
வாணி.சின்னாட் செலுமுனந் தேர்குவன் நீசொல்
கட்டுரைத் திண்ணம். மட்டள வின்றிக்
100.காதல் கதுவுங் காலை
ஒதுவை நீயே யுறுமதன் சுவையே. 18
மனோன், வேண்டுமேற் காண்டி. அவையெலாம் வீண்,வீண்.
காதலென் பதுவென்? பூதமோ? பேயோ?
வெருட்டினா னாய்போ லோடிடும்; வெருவில்
105.துரத்துங் குரைக்குந் தொடரும் வெகுதொலை.
அடிக்கடி முனிவரிங் கணுகுவர். அஃதோ
அடுத்தவவ் வறையில் யாதோ சக்கரம்
இருத்திடத் திறவுகோல் வாங்கினர் : கண்டனை !
படர்சுழி யோட பாய்திரை காட்டும்
110.வடதள வுதர வாணீ ! மங்காய் !
வரும்பொழு தரும்பொருள் கேட்போம்
வாசிட் டாதிவை ராக்கிய நூற்கே. 19
வாணி, நூறாக் கேட்கினு நூலறி வென்செயும்?
நீறா கின்றதென் னெஞ்சம், நாளை
115.யென்னுயிர் தாங்குவ தெவ்விதம்?
மன்னவன் கட்டளை மறுப்பதெவ் விதமே?20
மனோன், உன்றன் சிந்தையு முந்தைதன் கருத்தும்,
மன்றல் வழுதிக் குரைக்க வருவதும்,
ஆமையின் புறச்சார் பலவ னெதுங்குவது
120.ஏயு மெழிற்கால் வாணீ !
நீயுரைத் தனையோ நின்னே சனுக்கே? 21
வாணி. அதுவே யம்ம ! என் னுளநின் றறுப்பது.
வலுவையும் வேண்டிலர். வாழ்க்கையும் வேண்டிலர்.