பக்கம் எண் :

மனோன்மணீயம்
12

ஒருமொழி வேண்டினர் ; உரைத்திலேன் பாவி !
125.நச்சினே னெனுமொழிக் கேயவர்க் கிச்சை.
பிச்சியான், ஓகோ ! பேசினே னிலையே !
இனியென் செய்வேன்? என்நினைப் பாரோ?
மனவரா வண்ணமென் னனையு முரைத்தாள்.
ஊர்வரா வண்ணங் குடிலனு மோட்டினன்.
130.யார்பா லுரைப்பன்? யார்போ யுரைப்பர்?
உயிரே யெனக்கிங் கொருதுணை.
அயிரா வதத்தனு மறியா வமுதே ! (அழ) 22
மனோன், அழுங்கலை! அழுங்கலை! அனிச்சமு நெரிஞ்சிலா
அஞ்சிய அடியாய் ! அழுங்கலை ! அழுதுகண்
135.அஞ்சனங் கரைந்துநின் கஞ்சனக் கதுப்புங்
கறுத்ததே ! ஏனிது ! கருணைக் கடவுணின்
கருத்தே முடிப்பக் காண்டி. அஃதோ
மணங்கமழ் கோதையர் வந்தனர்.
அணங்குறல் பொன்னிகர் சுணங்கா ரணங்கே !

(செவிலியும் தோழிப் பெண்களும் வர)

செவிலி, 140. தாயே ! வந்துபார் ! நீயே வளர்த்த
முல்லையு நறுமுகை முகிழ்த்தது, வல்லை
காதலிற் கவிழ்வை போலும் !
போதுநீத் தெம்மனை புகுந்தநற் றிருவே ! 24
மனோன், போடி ! நீ யாது புகன்றனை தவத்தை
145.நாடிநா னிருக்க நணுகுமோ வென்மனந்
துச்சமா மிச்சையாற் சோர்வு?
நெருப்பையுங் கறையா னரிக்குமோ நேர்ந்தே !
முதற்றோழி. பொய்யன் றம்ம ! மையுண் கண்ணால்
வந்துநீ நோக்கு சந்தமார் முல்லை
150.நிரம்ப வரும்பி நிற்குந் தன்மை.