வனை. | ஐயோ ! போதாக் குறைக்கு இது வொன்றோ?-என் தலையெல்லாம் என்ன சுழல்கிறதே ! எனக்குப் பயித் தியம் தான் பிடித்திருக்கிறதென நினைக்கிறேன் ! இல் லாவிட்டால் எனக்கேன் தூக்கம் வரவில்லை? [ படுக்கையில் புரள்கிறாள். ]
புருஷோத்தமராஜன் கையில் வாளுடன் விரைந்து வருகிறார்.
|
பு. | எங்கே நீலவேணி?-நீலவேணி !
|
நீ. | [ எழுந்திருந்து ] மஹாராஜா !
|
பு. | வா இப்படி துஷ்டையே !
|
வனை. | ஐயோ ! இதென்ன?
|
பு. | [ போகும்பொழுது ] அந்த நிருபத்தைக் குறித்து உண்மை யைக் கூறாவிட்டால் உன்னைக் கொன்றுவிடுவேன் ! [புருஷோத்தமனும் நீலவேணியும் போகிறார்கள். ]
|
வனை. | தீர்ந்தது, நான் நினைத்தவண்ணமே முடிந்தது ! -நிரு பம் !-உண்மை ! -இவள் எப்படியும் கூறிவிடுவாள் ! - சந்தேக மில்லை ! நான் வாழாவிட்டால் அவள் மாத்திரம் மஹாராஜாவுடன்-கூடி வாழ்வானேன்? -எப்படியும் இறக்கப்போகிறேன்-பழி வாங்கிவிட்டு இறக்கிறேன் ! [அங்கிருக்கும் ஓர் கட்கத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அறை யை விட்டு வெளியே ஓடுகிறாள்.]
காட்சி முடிகிறது.
இரண்டாவது காட்சி.
இடம் :- அரண்மனையில் ஒரு திட்டிவாசல், காலம்-இரவு.
ஒரு புறமாக விகடனும் மற்றொரு புறமாக
அமிர்தகேசரியும் வருகிறார்கள்.
|
விக. | அந்தமட்டும் ஒழித்துவிட்டோமே சனியை ! இல்லா விட்டால் நம்மையுங்கூடத் தேடச்சொல்லும். இரண்டு
|