பக்கம் எண் :

114மனோஹரன்[அங்கம்-4

அவனாவது சுகமாய் வாழட்டும், நானிறந்தாலும் பெரிதல்ல ! 

கே. உன் பொருட்டு அவனும் இறக்கப்போகிறான் !  அதைக்
கண்டே நீ சாவாய் !  அவனை நீ கரு தரித்தவுடன் மஹா
ராஜாவை உனது வசமாக்கி, என்னைக்கொன்று, பிறகு
பிறந்த வசந்தனை மஹாராஜாவின் குழைந்தையென எல்
லோரும் நம்பும்படி நீ செய்த சூதுக்கெல்லாம் இதுவே
தக்க தண்டனை ! 

வனை. ஐயோ !  ஐயோ !  வசந்தனும் நானும் இறக்க வேண்டுமோ?

கே. ஆம்  ! 

வனை. ஐயோ !  நீ இன்னும் என்னை வருத்தாதே, ஒழிந்துபோ ! 

கே. இதோ போகிறேன். நீ இறந்து சீக்கிரம் என்னுடைய
ஸ்திதிக்கு வருவாய் !             [ மறைகிறது. ]  

வனை. அப்பா மறைந்துவிட்டது ! -ஒரு வேளை நீலவேணி
இது பேசியதெல்லாம் கேட்டிருந்தாளோ?-நீலவேணி
நீலவேணி ! 
வேகமாய் நீலவேணி எழுந்திருக்கிறாள்.

நீ. ஏன் அம்மா !   [ அருகில் வந்து ]  ஏன் அழைத்தீர்?

வனை. இங்கு ஏதாவது-யாராவது வந்தார்களா, பார்த்தனையா?

நீ. இங்கு யாரம்மா வருவது? ஒருவரும் வரவில்லையே ! 

வனை. சரிதான், நீ உறங்கப் போ.

நீ. [ தனக்குள் ]  இப்படி ஏதாவது இருக்கவேண்டுமென்று
அப்பொழுதே நான் சந்தேகப்பட்டேன் !  இல்லாவிட்டால்
மஹாராஜாவுக்குப் பிறக்கும் குழந்தை, பயித்தியக்காரனாய்,
கறுப்பா யிருப்பானா? அம்மட்டும் நான் உறங்காது
கேட்டிருந்தது நலமாயிற்று. கேசரிவர்மருக்கு வழி வைத்த
ஆசாமி தாங்கள் தானா? 
                       [ஒரு புறம்போய்ப்  படுத்துக்
                          கொள்ளுகிறாள். ]