பக்கம் எண் :

காட்சி-1]மனோஹரன்113

மில்லை. என்ன சங்கடம் !  என்ன சங்கடம் ! ஐயோ ! 
நித்திரையாவது வராதா !   [ படுத்து ]  இல்லை !  இல்லை ! 
-அப்பா !  மனோஹரா ! -சீ !  என்ன மனப்பிரமை !  மனோ
ஹரன் வந்து என்னை வெட்டினாற்போல் தோற்றியதே ! 
சித்தப்பிரமை !  ஐயோ !  எனக்கும் பயித்தியம் பிடித்து
விட்டதா என்ன? -சீ !  இதென்ன? மனதைத் தைரியப்
படுத்திக் கொண்டு தூங்கிப்பார்ப்போம்.
 
                    [மறுபடியும் சயனித்துக் கொள்கிறாள். ]
 
        கேசரிவர்மன் அருவம் தோன்றுகிறது.

யார் அது?-ஐயோ !  வந்தாயா மறுபடியும்?

கே. வசந்தசேனை !  வந்தேன் மறுபடியும்?

வனை. உன்னை யார் அழைத்தது? போ !  போ !  ஐயா !  நான்
படுவதெல்லாம் போதாதோ? நீயும் வந்து கிளறவேண்டுமோ?

கே. வசந்தசேனை ! -நான் அப்பொழுதே சொன்னேனே
கேட்டனையா? படு இப்பொழுது !  உன் தீவினை உன்
னையே அழித்தது ! 

வனை. அழித்துத்தான் விட்டதே !  இன்னும் என்ன இருக்
கிறது? எல்லாம் தீர்ந்ததே !- 

கே. எல்லாம் தீர வில்லை !  இதனுடன் உனது துக்கம் நீங்கிய
தென எண்ணாதே !  என்னைக் கொன்றதற்கும், உத்தமி
யாகிய பத்மாவதிதேவிக்கும் மனோஹரனுக்கும் நீ செய்த
தீங்கிற்கும், தக்க தண்டனையாக நீ சீக்கிரம் இறப்பாய் ! 

வனை. இறந்துபோனால் போகட்டும் ;  உன்னை கேட்கவில்லைபோ ! 

கே. வசந்தசேனை !  என் மைந்தனாகிய வசந்தனும் உன்
பொருட்டு-

வனை. ஐயோ !  அருவமே !  உறக்கக் கூவாதே, யாராவது
கேட்டுவிடப் போகிறார்கள் !  மஹாராஜாமுதல் எல்
லோரும் வசந்தனை மஹாராஜாவின் மைந்தனென்றே
கருதி யிருக்கிறார்கள். இதுவும் தெரிந்துவிடப்போகிறது
         15