|
இனி மஹாராஜா என்னைக் கண்ணெடுத்தும் பார்க்கப்
போகிற தில்லை. ஐயோ ! நான் இதுவரையில் பட்ட
கஷ்டங்களெல்லாம் வீணாயினவே ! வீணாயினவே !
|
நீ.
|
அம்மா, தாங்களேன் துக்கப்படுகிறீர்கள்? எப்படியும்
சின்ன ராணியா யிருக்கும் தங்களுக்கென்ன குறை?
|
வனை.
|
நீலவேணி, என்னை யினி நீ சின்ன ராணி யென்றழைக்க
வேண்டாம். அவ் வாழ்வெல்லாம் அடியுடன் ஒழிந்
தது. எப்பொழுது மஹாராஜா பத்மாவதியின் முகத்
தை நேரிற் பார்த்தாரோ சபையில், அப்பொழுதே
எனக்குத் தெரியும் ! ஆயினும் மஹாராஜா நான்தான்
இதற்கெல்லாம் காரணமென்று ஒருவாறு சந்தேகங்
கொண்டிருக்கிறாரே யொழிய, நான் செய்த சூது இன்ன
தென்று தெளிவாக அறிந்திலர் ! அந்தமட்டும் எனது
பாக்யந்தான். இதையும் அறிந்தால் தானாகவே என்னைக்
கொன்று விடுவார் ! -நீலவேணி, ஜாக்கிரதை ! அந்த
நிருபங்களின் சமாசாரம் ஒருவருக்கும் தெரிவிக்காதே !
|
நீ.
|
இல்லை, யம்மா. தாங்கள் எனக்கெவ்வளவோ உபகாரங்க
ளெல்லாம் செய்திருக்கிறீர்களே, அவற்றை யெல்லாம்
நான் மறப்பேனா?
|
வனை.
|
சரிதான் ; நீலவேணி, என் தலை என்னவோபளுவாயிருக்
கிறது. நீயும் இந்த அறையில் ஓர் புறமாக உறங்கு சற்றே.
|
நீ.
|
அப்படியே
அம்மா. [ஒரு புறமாய்ப்
படுத்துக்
கொள்கிறாள். ]
|
வனை.
|
கண்ணை மூடிக்கொண்டு பார்ப்போம், அப்பொழுதாவது
தூக்கம் வருகிறதா என்று, ஐயோ ! -கண்ணை மூடும்
பொழுதெல்லாம் மனோஹரனும் பத்மாவதியும் எதிரில்
தோற்றுகிறது போலிருக்கிறதே ! ஐயோ நான் என்ன
செய்வது? தூக்கமும்பிடிக்கவில்லை. சற்று உலாவிப் பார்க்
கவா? [எழுந்திருந்து உலாவி ] -சீ ! இதிலும் பிரயோஜன
|