|
|
நான்காவது
அங்கம்
முதற்
காட்சி.
இடம்-பள்ளியறை. காலம்-இரவு.
நீலவேணி
வருகிறாள்.
|
| நீ.
|
வேண்டும்
இவளுக்கு இந்தக் கதி ! இன்னும் மற்ற சமா
சாரங்களையும் சொல்லி எரிகிறகொள்ளியை ஏறத் தள்ளி
விடுகிறேன். என்னைப்போன்ற தாதியா யிருந்தவளுக்கு
இந்த வாழ்வு வந்தால் எத்தனை நாளைக்கு நிற்கும்?
வாழ்வு வந்தாற்றானென்ன? தன் பழைய ஸ்திதியையும்
பழைய சினேகிதர்களையும் மறக்கும்படியாகவா சொல்
லிற்று? தன் பழைய ஞாபகங்களை யெல்லாம் மறந்து
விட்டு என்னைத் தன் பணிவிடைப் பெண்ணைப்போல
வன்றோ உபயோகித்து வந்தாள்? ஆகட்டும் ! ஆகட்டும் !
அதுவுமன்றி உத்தமியாகிய பத்மாவதிக்கும் மனோஹர
ருக்கும் என்னென்ன தீங்கிழைத்தாள் ! அவைகளெல்
லாம் இப்பொழுது இவள்மீதே திரும்பிக் கொள்ளுகின்
றன ! வேண்டும் ! வேண்டும் ! வசந்தசேனை ! சற்று
பொறு, சீக்கிரத்தில் பழைய ஸ்திதிக்கு என்னைப்போல்
வந்துவிடுவாய் ! பயப்படாதே ! உன்னை நான் எப்பொழு
தும் சின்ன ராணி யென்றல்லவோ அழைக்கவேண்டு
மென்று கட்டளையிட்டாய்? இன்னும் அந்த அந்தஸ்து
உனக்கு எத்தனை நாள் நிற்கிறதோ பார்ப்போம் ! மஹா
ராஜாவுக்கு உன்னுடைய சூதெல்லாம் ஏறக்குறைய
முழுவதும் வெளியாய்விட்டது. இன்னும் மற்றதையும்
நான் சொல்லிவிடுகிறேன், அஞ்சவேண்டாம்.
வசந்தசேனை
விரைந்து வருகிறாள்.
|
| வனை.
|
[ படுக்கையின்மீது
சாய்ந்து ] நீலவேணி ! நீலவேணி ! நீ கூறிய தெல்லாம் உண்மைதான் ; ராஜப்பிரியனையுங்
காணோம்.
|
|
|
|