|
|
கொண்டிருந்தது நியாயமாவென்றும், இது தமக்கும்
இழிவன்றோ வென்றும் கேட்டிருந்தேன்.
|
| பு.
|
எனக் கெழுதிய நிருபத்திலா?
|
| ப.
|
ஆம் ! சந்தேகமென்ன? வேறு யாருக்கு நான் இப்படி
எழுதுவது?-மஹாராஜா ! என்ன சமாசாரம்?
|
| பு.
|
சந்தேகமில்லை ! சந்தேகமில்லை ! அந் நிருபங்கள் மாறுபட்
டிருக்கவேண்டும் பத்மாவதி ! பத்மாவதி ! இன்று என்
மனத்திலிருந்த ஒரு பெரும் பாரத்தைப் போக்கினை.
இப்பொழு தெல்லாம் தெளிவாய் விட்டது-அப்பா !
இனிமேல் நான் மனச்சஞ்சலமின்றி உறங்குவேன். -
கண்ணே ! கண்ணே ! உன்மீது வீணில் என்ன சந்தேகங்
கொண்டேன் !
|
| ப.
|
மஹாராஜா ! என்ன சமாசாரம்?
|
| பு.
|
கண்ணே,
நீ எனக்கும் சத்தியசீலருக்கும் எழுதிய நிருபங்
கள் மாறுபட்டிருக்கவேண்டும். அதைக்கொண்டே உன்
மீது நான் சந்தேகங்கொண்டேன், இத்தீமைகளெல்லாம்
நேர்ந்தன. நான் உடனே சென்று நீலவேணியை
விசாரித்து, இன்னும் இதனுண்மையை அறிந்து விடுகி
றேன். அவளே அந்நிருபங்களை யென்னிடங் கொடுத்
தாள் ; நான் இதோ வந்துவிட்டேன் ! என்னை மன்னிப்
பாய் ! [விரைந்து
போகிறார். ]
காட்சி
முடிகிறது.
|