| ப.
|
ஆம்.
|
| பு.
|
என்ன எழுதினை?
|
| ப.
|
மனோஹரனை வசந்தசேனை தூஷித்தபொழுது அவரும்
அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தன ராதலின், நீர்
இந்த அனியாயத்தைப் பார்த்துக் கொண்டிருக்கலாமா?
அப்படிப் பொறுத்துக்கொண் டிருந்ததற்குக் கார
ணத்தை உடனே அறிய விரும்புகிறேன் என்று கேட்டி
ருந்தேன்.
|
| பு.
|
என்ன ! -எனக்கு நீ ஒரு நிருபம் எழுதிய துண்மை
தானா?
|
| ப.
|
ஆம், அன்றைத்தினமே உமக்கும் ஒன்று எழுதினேன்.
|
| பு.
|
அதில் என்ன எழுதினை?
|
| ப.
|
ஏன்? அதில் என்ன தவறிருந்தது?-பிராணநாதா
என்று உம்மை அதில் நான் அழைத்தது தவறென்கிறீர்
களோ? இப் பதினாறு வருஷங்களாகப் பார்க்கமாட்டே
னென்றவள், பிராணநாதா என்று தம்மை எவ்வண்ணம்
அழைக்கிறாளென உமக்கு ஆச்சரியமாயிருந்ததோ?
எது எப்படியிருந்தபோதிலும் ஏன் தங்களைப் பிராண
நாதா என்று அழைக்கலாகாது என்று அதிலேயே
கேட்டிருந்தேனே, மறந்தீரோ?
|
| பு.
|
ஓஹோ ! -பத்மாவதி, இன்னும் என்ன எழுதினை, நன்
றாய் ஞாபகப்படுத்திச் சொல்.
|
| ப.
|
அதையேன் கேட்கிறீர்?
|
| பு.
|
சொல், சொல்கிறேன்.
|
| ப.
|
அப்பொழுது தாமே இவ்வாறு சந்தேகங்கொண்டிருந்தீ
ரென்று தெரியாது. ஆகவே தம்முடைய மகனை ஒருத்தி
வேசிமகனெனக் கூறியபொழுது, தாம் சும்மா கேட்டுக்
|