|
|
சீலருக்கு நான் முன்பிட்ட கட்டளையை மீட்டுக்கொண்டு
மனோஹரனைக் கொல்லாதிருக்கும்படி கட்டளையிட்
டேன்-மனோஹரனிறக்க வில்லை.
|
| ப.
|
இது உண்மைதானா?
|
| பு.
|
என் சொல்லை உறுதியாய் நம்பு. இன்னும் உண்மை
யைக் கூறுகிறேன். நானே மாறு வேஷம் பூண்டு அவ்
வுத்தரவையும் எனது கணையாழியையும் எடுத்துச்
சென்று, மனோஹரனும் சத்தியசீலரும் ஒருவரை யொரு
வர் கொல்லப்போகும் சமயத்தில் தடுத்து, அவ்வுத்தர
வையும் அறிகுறியாகக் கணையாழியையுங்கொடுத்தேன்.
என் சொல்லை உறுதியாய் நம்பு.
|
| வி.
|
மாமி, நான் அப்பொழுதே சொன்னேனே ! பார்த்தீர்
களா ! என்னிடம் இப்பொழுது இறப்பதில்லையென்று
சொல்லிவிட்டுத் தவறுவாரா பிராணநாதர்?
|
| பு.
|
பத்மாவதி, இனியாவது உன்னை நான் நேரிற்காண
லாகாதா?
|
| ப.
|
மஹாராஜா, என்னைத் தாம் பலவந்தப்படுத்தலாகாது.
நான் ஒரேவார்த்தை சொல்லுகிறேன். உம்மை நான்
மன்னித்தது உண்மையாயினும், மனோஹரனை என் கண்
முன்பாக நான் பார்க்குமளவும், உம்மை நான் நேரிற்
காணேன். அவனை யழைத்து வந்து என் முன்பாக
விடும் ! அப்பொழுது உம்மைப் பார்க்கிறேன், இது சத்
தியம் !
|
| பு.
|
சரி ! அப்படியே, உன் இஷ்டப்படி ; பத்மாவதி, கடை
சியில் நான் உன்னை ஒரு கேள்வி கேட்கலாமோ? என்
மீது கோபம் கொள்ளலாகாது.
|
| ப.
|
கேளும்.
|
| பு.
|
சில தினங்களுக்குமுன் சத்தியசீலருக்கு நீ ஒரு நிருபம்
எழுதியது உண்மைதானா?
|