| பு.
|
கண்ணே, இன்றே நான் புனிதனானேன் ! இன்றே என்
ஜன்மம் சபலமாயது ! போது மிவ்வளவு ! இனி நான்
இறந்தாலும் பெரிதல்ல ! பிராணநாதா என்று உன் வாயி
னின்றும் இப்பதினாறு வருஷங்களாகக் கேளாத செவி
இன்றே இச்சொல்லைக் கேட்டின் புற்றது !
|
| ப.
|
விஜயா, உன் மாமனாரிடம் சென்று அந்த வாளை வாங்
கிக்கொண்டுவா இப்படி.
|
| பு.
|
ஓஹோ ! பத்மாவதி இனி யொன்றிற்கும் அஞ்சவேண்
டாம் ; விஜயா, வேண்டுமென்றால் எடுத்துக்கொண்டு
போ. இதோ.
|
| ப.
|
மஹாராஜா, நான் விடை பெற்றுக்கொள்ளுகிறேன். நீர்
இனி சுகமாய்-அவளை மணந்து நெடுநாள் வாழ்வீராக !
|
| பு.
|
பத்மாவதி ! என்ன சொல்லினை? வசந்தசேனையை
மணந்து நான் சுகமாய் வாழ்ந்திருப்பதா? இனி அந்தப்
பாதகியை மனத்தில் நினைப்பேனாயினும், உத்தம பத்
தினிகளுக்குத் துரோகம் செய்யும் பாதகர்கள் செல்லும்
அழியா நரகத்தில் அமிழ்வேனாக ! இதிருக்கட்டும்-பத்
மாவதி, விடை பெற்றுக் கொள்கிறே னென்றனையே,
அது என்ன சமாசாரம்?
|
| ப.
|
நான் இவ்வுலகிற் பிறந்தவேலை நிறைவேறிவிட்டது ; ஆக
வே நான்-
|
| பு.
|
ஓஹோ ! பத்மாவதி, நீ இறப்பானே னிப்பொழுது? அக்
னிப் பிரவேசமாகச் சித்தம் செய்திருப்பதாகக் கூறினார்
கள், அதைத் தடுக்கவன்றோ நான் வந்தேன்? இனி நீ
இறப்பானேன்? எல்லாம் சரியாய்விட்டதே !
|
| ப.
|
மனோஹரன்- இறந்தபின் - நான் உயிர்வாழவேண்டிய
நியாயமில்லை.
|
| பு.
|
கண்ணே, அதைக் கூறவே நானும் சற்று முன்பாக
வாயெடுத்தேன். மனோஹரன் இறக்க வில்லை ! சத்திய
|