|
|
பௌத்தாயனர்
வருகிறார்.
|
| வனை.
|
முதல்
மந்திரி, பௌத்தாயனரே! மெச்சினேன் உமது
புத்தியை!
|
| பௌ.
|
[மனோஹரன்
உடைவாளை அவளிடம் கொடுத்து] தாங்களிட்ட
கட்டளையை நிறைவேற்றிவிட்டேன். ஆயினும் எப்படி
உயிருடன் தப்பி வந்தேனென்று எனக்கே ஆச்சர்யமா
யிருக்கிறது!
|
| வனை.
|
அந்தச்
சிங்கத்தின் வாயினின்றும் எப்படி தப்பி வந்தீர்?
|
| பௌ.
|
அம்மா,
நான் போகும்பொழுதே நீலவேணியிடமிருந்து
அந்த வாளைப்பற்றிய எல்லா விஷயங்களையும் ஆதியோ
டந்தமாக அறிந்துகொண்டேன். பிறகு ஓர் சந்நியாசி
வேடம் பூண்டு நமது சேனைகள் தங்கியிருந்த இடத்
தைச் சார்ந்து, மனோஹரரிடம் அவரது தாயார் ஆசியுடன்
அனுப்பியதாகக் கூறினேன். உடனே அவர் மகிழ்ந்து
எனக்குவேண்டிய உணவு முதலியவற்றைக் கொடுப்
பித்து, எப்பொழுதும் தன் பக்கலிலேயே யிருக்கும்படி
கூறினார். இது தெய்வாதீனமெனக் கருதி சந்தோஷத்
துடன் நான் உடன்பட்டு, நடுநிசியில் சமயம் பார்த்து
அவர் அருகில் வைத்திருந்த உடைவாளை மெல்லென
எடுத்துக்கொண்டு புறப்பட்டு வந்துவிட்டேன்.
|
| வனை.
|
மனோஹரன்
உம்மீது சிறிதும் சந்தேகங் கொள்ளவில்
லையா?
|
| பௌ.
|
நான்
தனது தாயாரிடமிருந்து வந்ததாகக் கூறியது
முதல் என்மீது எள்ளளவும் அவர் சந்தேகங் கொள்
ளவில்லை.
|
| வனை.
|
மிகவும்
சந்தோஷம். காலத்தில் நீர் எனக்குச் செய்த
இப் பேருதவியை நான் ஒருகாலும் மறவேன்.- மனோ
ஹரன் எப்பொழுது இங்கு வருவதாக உத்தேசித்திருக்
கிறான் தெரியுமா உமக்கு?
|