|
|
இன்றுமுதல் ஆரம்பித்து சீக்கிரம் இவனது
வியாதியைத் தீர்க்கவேண்டும். உம்முடைய பெயரென்ன?
|
| அ.
|
அமிர்தகேசரி.
|
| விக.
|
அமிர்தவேசரி!
|
| அ.
|
இல்லை, ஐயா, பரிகாசம் பண்ணாதீர், அமிர்தகேசரி.
|
| விக.
|
மன்னிப்பு நான் சொன்னது தப்புதான், இதுவேசரி!
|
| வனை.
|
பேசாமலிருக்கமாட்டாய் நீ? வா, உனக்குத்தகுந்த தண்டனை
விதிக்கிறேன்! வசந்தா, இதோ இருக்கிற அமிர்த
கேசரி சொற்படி நீ நடந்துவரவேண்டும். இல்லாவிட்
டால் உன்னை நான் தண்டிப்பேன். விகடா, வசந்தன்
அமிர்தகேசரி சொற்படி நடக்கும்படிச் செய்யவேண்டும்நீ.
அவர்களிருவரும் சச்சரவிட்டுக்கொண்டால் உன்னை
அரண்மனையினின்றும் நீக்கிவிடுவேன்.
|
| விக.
|
அம்மணி! இது நல்ல வேலெயாயிருக்குதே! இவங்க
சண்டே போட்டுக்குனா எனக்கு தண்டனெயா? அம்
மணி, இந்த வேலெ எனக்கு வாணாம், வாணாம்!
|
| வனை.
|
விகடா,
அப்படியல்ல அவர்கள் சமாதானமாயிருக்கும்
படி செய்; வசந்தன் வியாதி நீங்கினால் உனக்கு நல்ல
பரிசளிக்கிறேன்.
[ஒரு
தாதி வந்து வசந்தசேனை
யின்
செவியில் ஏதோ ரகசிய
மாய்க்கூற,
அவளுக்குத்தானும்
ரகசியமாக
விடைகொடுத்தனு
ப்புகிறாள்.]
சரிதான், நீங்கள் புறப்பட்டுச் செல்லுங்கள்.
[அமிர்தகேசரி,
விகடன், வசந்தன்,
நீலவேணி
போகிறார்கள்.]
இப்பொழுதுதான் நமக்கு நல்லகாலம் பிறந்திருக்கிறது!
இனி பத்மாவதி இறப்பாளென்பதற்குச் சந்தேகமில்லை!
அவளிறப்பாளாயின் மனோஹரனும் இறப்பான் துயராற்றாது;
விஜையாள் கருவோடு உடன் செல்வாள். பிறகு
நாம் கவலையற்று வாழலாம். அப்பா!
|
|
|
|