| அ.
|
என்னிடத்திலே இந்த பித்தத்திற்கு ஒரு மாத்திரை
இருக்கிறதுங்கோ-
|
| விக.
|
அந்த மாத்திரெ சாப்பிட்டவுடனே வைகுண்ட யாத்
திரை தானுங்கோ!
|
| அ.
|
இல்லை, ஐயா, அப்படியல்ல அந்த மாத்திரையை மூன்று
வேளை புசித்தால் அப்புறம் மருந்தே சாப்பிடவேண்டிய
தில்லை.
|
| விக.
|
வாஸ்தவம், மூணுவேளெ சாப்பிட்ட பிற்பாடு, அப்புறம்
மருந்து என்னாத்துக்கு? ஆளே பூட்டா அப்புறம் மருந்
தெங்கே சாப்பிட்றது? சந்தேகமில்லை!
|
| வ.
|
சந்தேகமில்லை.
|
| வனை.
|
விகடா! நீ பேசாமலிருக்கமாட்டாயா?
|
| விக.
|
இல்லை, அம்மணி. பேசாமலிருக்கிறத்துக்குத்தான் மாத்
திரெ சொல்றாரே எங்க அண்ணா!
|
| அ.
|
ராஜபத்தினி, இதேமாதிரியாக எங்கள் ஊரில் ஒருவருக்கு
வியாதி கண்டிருந்தது நாலைந்து மாதங்களுக்கு முன்
பாக, அனேக வைத்தியர்கள் வந்து பார்த்து அசாத்திய
மென்று கைவிட்டார்கள். பிறகு நான் போய் இந்த மாத்
திரையை மூன்று வேளை கொடுத்தேன், போய்விட்டது.
|
| விக.
|
உயிரா? ஐயோ பாவம்!
|
| அ.
|
இல்லை, ஐயா, நோய் போய்விட்டது.
|
| விக.
|
வாஸ்தவந்தான் நோய் போய்விட்டது, அத்தோடே
அவரும் போய்விட்டார். தாங்களென்ன கால் மாடோ,
தலை மாடோ?
|
| நீ.
|
பேசாமலிரு மையா!- அம்மா, எப்படியாவது தாங்கள்
அனுக்கிரகிக்க வேண்டும்-
|
| வனை.
|
நீலவேணி, அதற்கென்ன? அப்படியே ஆகட்டும், நான்
சொன்னபடி செய்யாமற்போவேனா? [அமிர்தகேசரிக்கு]
ஐயா, உம்மை இளவரசருக்கு வயித்தியராக நியமித்
|