| விக.
|
என்ன அம்மணி! எனக்கொண்ணுந் தெரியாதே! நான்
தூங்கிக்கினு இருந்தேன், கூச்சல்கேட்டு என்ன விஷய
மிண்ணு ஓடிவந்தேன்; தூக்கமெல்லாங் கெட்டுது.
என்ன சேதி?
|
| அ.
|
அம்மணி, இவர்தான் என்னை மறைந்து கொள்ளும்படி
சொன்னதென்று நினைக்கிறேன்.
|
| வ.
|
பாத்தைங்களா ஐயா! உட்டேனா நானு? சந்தேகமில்லை!
|
| வனை.
|
விகடா! நான் இம்முறையும் உன்னை மன்னித்தேன்.
இனி இம்மாதிரியான துர்க்கிர்த்தியங்கள் செய்யாதே!
இதென்ன சங்கடமாயிருக்கிறது!
|
| விக.
|
இல்லெ அம்மணி. நான் மறுபடியுஞ் செய்யவேமாட்டேன்.
சந்தேகமில்லை!
|
| வ.
|
ஆமாம், அம்மா! சந்தேகமேயில்லை!
|
| வனை.
|
நீலவேணி, இவர்தானா உன் தமையனாராகிய வைத்தியர்?
|
| விக.
|
ஆமம்மா, இவர்தான் என் தமயனாராகிய பயித்தியர்.
|
| நீ.
|
இவர் அரண்மனை விதூஷகர், இவர் கூறுவதைக்
கவனிக்கவேண்டாம் அண்ணா.- (வசந்தசேனையுடன்) ஆமாம்,
அம்மா, எப்படியும் ராஜகுமாரருக்குக் கண்டிருக்கிற
வியாதியை நீக்கிவிடுவதாகக் கூறுகிறார்.
|
| அ.
|
அம்மணி, ஈஸ்வரனுடைய கிருபையினாலும், எனது குரு
வின் கடாக்ஷத்தாலும் நமது இளவரசருக்குக் கண்டிருக்
கிற வியாதியைச் சீக்கிரத்தில் தீர்த்துவிடுவேன்- இது
பித்தத்தைச் சார்ந்த வியாதி-
|
| வ.
|
என்னா ஐயா! எனக்கு பயித்தியமா புடிச்சிப்போச்சி?
|
| வனை.
|
வசந்தா! பேசாமல் இரு சற்று! எனக்குக் கோபம்வரும்
படிச் செய்யாதே!
|
| அ.
|
அம்மணி, என்னுடைய கைவல்லபம் இங்கே தெரியாது-
|
| விக.
|
ஆமாம், இங்கே என்னமா தெரியும்? அங்கே போனவங்
களே கேட்டா தெரியும்!
|