பக்கம் எண் :

காட்சி-3]மனோஹரன்17

அ.

அப்பா! நான் என்ன செய்வது? என்ன செய்வது?

விக. நான் சொல்றபடி கேளுங்கோ, இங்கே எங்கே யானாலும்
ஒளிச்சிக்கினு இருங்கோ, நான் போயி சமாதானப்
படுத்தி அழெச்சிக்கினுவர்ரேன்.

அ. எங்கே ஒளித்துக்கொள்வது? எங்கே ஒளித்துக்கொள்வது?

விக. அதோ அந்தப் பெட்டியிலே ஒளிச்சிக்கிங்கோ!

          [பெட்டியைக் காட்டிவிட்டுப் போகிறான்.
            அமிர்தகேசரி பெட்டியைத் திறந்து
            உள்ளே நுழையப் பார்க்க, வசந்தன்
            அதனுள்ளிருந்து வெளியிற் கிளம்பி
            அமிர்தகேசரியைப் பிடித்துக் கொண்டு,
            'சந்தேகமில்லை! சந்தேகமில்லை!?
            என்று கூச்சலிடுகிறான். அமிர்த
            கேசரி பயந்து போகிறான்.]

    கூச்சலைக்கேட்டு நீலவேணியும் வசந்தசேனையும் ஓடி வருகிறார்கள்.

வனை. இதென்ன! இதென்ன!

வ. அம்மா, நான் இங்கே ஒளிச்சிக்கினு இருந்தேன்; இவர்
வந்து என் தலெமேலெ உக்காரப்பாத்தாரு, நான் ஒத்
துக்குவேனோ? மாட்டேன் - சந்தேகமில்லை! நீங்க ஓணு
மிண்ணா யாரெயிண்ணாலும் கேளுங்கோ!

அ.

ராஜமகிஷி! நான் அறியாமற் செய்த பிழையை மன்னிக்க
வேண்டும். இங்கே யாரோ ஒருவர் இருந்தார், அவர் ராஜ
குமாரர் வருவார், உன்னைக் கண்டால் கெடுதி செய்வார்,
இதற்குள் மறைந்துகொண்டிரு, என்று என்னிடம் கூறினார்-

         விகடன் தன் வேஷத்தைக் களைந்துவிட்டு மறுபடியும் மெல்ல

                     வருகிறான் ஒரு புறமாக.

விக. அம்மணி, நமஸ்காரம்; என்ன சமாசாரம்? என்ன சங்
கதி? என்ன விசேஷம்? என்ன தாத்பரியம்?

வனை. விகடா? இதெல்லாம் உன் வேலையா?