| அ.
|
ஐஐயோ! அப்படி யொன்றுமில்லை. நான் உன் பந்து
வல்ல, எனக் குன்னைத் தெரியாதே! தெரியாதே!
|
| விக.
|
இல்லெ, இல்லெ, நீங்க என் அண்ணாதான்! நான் விட
வேமாட்டேன்!
|
| அ.
|
ஐயோ சனி- என்னை விடப்பா! நீ என் தம்பிதான்,
விடு விடு!-இதென்ன பெரிய இழவாக இருக்கிறது-
அப்பா, இந்த அரண்மனையில் உனக் கென்ன வேலை?
|
| விக.
|
அந்த வேலெயெ யேன் கேக்கரைங்கோ? சின்ன ராணிக்கு
ஒரு புள்ளெ இருக்கிறாரு; பெரிய பயித்தியம்! அவ
ரோடே எப்பவும் இருந்துக்கினு அவர் ஒருத்தருக்கும்
கெடுதி செய்யாமலிருக்கும்படி பாத்துகிறது.
|
| அ.
|
அவர் என்ன எல்லோரையும் அடிக்கிறாரா என்ன?
|
| விக.
|
அந்த எழவே கேக்காதைங்கோ! யாரானாலும் புதுசா
வந்தா போதும்; பாத்துட்டாரோ யமலோகந்தான்!
|
| அ.
|
அப்படியா?
|
| விக.
|
ஆமாம். நீங்க என்னாத்துக்கு வந்தைங்கோ அண்ணா?
|
| அ.
|
அந்த ராஜகுமாரருக்கு வயித்தியஞ் செய்ய வந்திருக்கிறேன்,
சின்ன ராணியின் உத்திரவுபடி. அப்பா, நீ
சொல்லும்படியான அவ்வளவு துஷ்டராயிருந்தால் நான்
என்ன செய்வது?
|
| விக. | அண்ணா! அண்ணா! ஐஐயோ! இதென்ன. சங்கடமா யிருக்குது! உங்களே பாத்தாருண்ணா தவிடு பொடி யாக்கி விடுவாரே! இதுக் கென்னா செய்றது?
|
| அ. | இதற் கொரு யுக்தியு மில்லையா?
|
| விக. | ஒண்ணு மில்லே! சந்தேக மில்லை!
|
| வ. | [பெட்டிக்குள் ளிருந்து] சந்தேக மில்லை! சந்தேக மில்லை!
|
| அ. | யார் அது? யார் அது?
|
| விக. | ஐஐயோ அவர் இங்கு வர்ராப்போலே இருக்குதே! எதிரிலே பாத்தா உங்க பாடு தீந்துது!
|