| அ.
|
[கொஞ்சம் திடுக்கிட்டு] ஐயா! தாங்கள்-
|
| விக.
|
உம்-
|
| அ.
|
தங்களுடைய-
|
| விக.
|
உம்-
|
| அ.
|
தங்களுடைய நாம தேயம்-
|
| விக.
|
உம்-
|
| அ.
|
தங்களுடைய நாமதேயத்தைக் கேட்கலாமோ?
|
| விக.
|
கேட்கலாம்.
|
| அ.
|
தங்களுடைய நாம தேய மென்ன?
|
| விக.
|
பன்ரெண்டி லொன்று சொல்லுங்கள்.
|
| அ.
|
தங்கள் பெய ரென்னவென்று கேட்கிறேன்.
|
| விக.
|
அதைத்தான் ஜோசியம் பார்த்துச் சொல்லுகிறேன்.
|
| அ.
|
இதேது பயித்தியம்போ லிருக்கிறதே!
|
| விக.
|
அடடா! நீங்களா? அண்ணா! அண்ணா! அண்ணா!
[அவனை தழுவி கட்டிக்கொண்டு]
இத்தனை நேரம் தெரியாமல் போச்சே! என்னெ மறந்துப்
பூட்டைங்களா என்ன? அண்ணா! எல்லாரும் வீட்டிலே
க்ஷேமந்தானே? அண்ணி என்னமா யிருக்கிறாங்க?
|
| அ.
|
அப்பா என்னை விடு விடு! நீ யாரப்பா? எனக்குத் தம்பி
ஒருவனு மில்லையே!
|
| விக.
|
அண்ணா! இதுக்குள்ளே மறந்தூட்டைங்களா? நான் தான்
உங்க தம்பி யாச்சே!
|
| அ.
|
தம்பியாவது? நீ எப்படி எனக் குறவு? நீ யார்?
|
| விக.
|
எப்படி உறவா? இதுக்குள்ளே மறந்தூட்டைங்களே
அண்ணா! உங்க பாட்டனுக்குப் பாட்டனெயும் என்
பாட்டனுக்குப் பாட்டனெயும் ஒரே புலி முழிங்கூட்டுதே,
மறந்தூட்டைங்களா? நீங்கதான் மறந்துட்டாலும்
நான் மறக்கமாட்டேன் நம்பளுடைய பந்துத்வத்தே!
|