பக்கம் எண் :

14மனோஹரன்[அங்கம்-1

வ.

எனக்கு மருந்து கொடுத்தா மண்டேயே பேத்துடமாட்
டேனா! சந்தேகமில்லை!

விக. சந்தேகமில்லை, உங்கவீரம் கேப்பானேன்? பூரம்தானே!

வ. ஆமாம்-ஒருவேளை அம்மா கோவிச்சிக்கினா என்னா
செய்யரது?

விக. ஆ!- அது வொரு சந்தேக மிருக்குது-என்னா செய்யலாம்?

வ. ஐயா! நான் சொல்றபடி செய்யறிங்களா? மொள்ள அந்த
வயித்தியரே அனுப்பிச்சிடுங்க, உங்களுக்கு இந்த
முத்து மாலே தர்ரேன்.

விக. ஆமாம், அப்றம் உங்க பழய வயித்தியரே தெரித்தூட்டேன்
இண்ணு, சின்னராணி கோவிச்சிக்கினாங்களே,
அப்புறம் இதுக்குங் கோவிச்சிக்கினா?

வ. அதெல்லாம் நான் சொல்லிடுறேன்.

விக. ஐஐயோ! அதோ வர்ராப்போலே யிருக்குதையா வைத்
தியரு உங்களே தேடிக்கினு! எங்கேயானாலும் ஒளிச்சிக்
கிங்கோ! ஒளிச்சிக்கிங்கோ! நான் பேசி அனுப்பிச்சூட்றேன்!
ஒளிச்சிக்கிங்கோ! ஒளிச்சிக்கிங்கோ!
                    [வசந்தனை யொரு பெட்டிக்குள்
                      ஒளிந்துகொள்ளச் செய்கிறான்.]

அதோ வர்ராப்போலே யிருக்குது, ஒரு வேடிக்க பண்
ணுவோம். நம்பளும் அவரெப்போல் ஒரு வயித்திய
வேஷம் போட்டுக்குவோம்!               [போகிறான்.]



    எதிர்ப்புற மிருந்து நீலவேணியும் அமிர்தகேசரியும் வருகிறார்கள்.

நீ. இங்குதானிரும். நான் போய்ச் சின்ன ராணி எங்கே
என்று பார்த்துவிட்டு வருகிறேன்.                [போகிறாள்.]

[அமிர்தகேசரி ஒரு புறமாக உட்கார்ந்து
  தன் ஓலைப்புஸ்தகத்தை விரித்துப்
  படிக்கிறான். விகடன் மெல்ல வந்து
  அவன் பக்கத்தி லுட்கார்ந்து தானும்
  ஒரு ஓலைப் புஸ்தகத்தை விரித்து
  அவனைப்போல் படிக்கிறான்.]