பக்கம் எண் :

காட்சி-3]மனோஹரன்13

விக.

பூட்டுது! பூட்டுது! பூட்டுது!

வ. சந்தேகமில்லை!

வி. சந்தேக மில்லை. தங்களுக்குச் சந்தேகமென்பதே ஏது?
புத்தியிலே எதுவானாலும் இருந்தாலல்லவோ சந்தேகம்
வரணும். அங்கேதான் ஒண்ணு மில்லையே! நண்ணா
சொன்னைங்கோ சொன்னாலும், ஒரு புத்தியில்லாத
பேச்சு!

வ. ஏன் ஐயா? என்னை புத்தியில்லாதவனிண்ணா சொல்
ரைங்கோ?

விக. தங்களை அப்படி சொல்வேனோ? புத்தியில் ஆதவன்,
சூரியனுக்குச் சமானமானவனே இண்ணு, சொன்னேன்.

வ. சந்தேக மில்லை ஐயா, இண்ணா!

விக. அதெல்லா மிருக்கட்டுமையா-இப்போ எனக்கு ராணி
ஒரு வயித்தியனே ஏற்பாடு செய்திருக்கிறாங்களாமே,
எனக்கு வயித்தியன் என்னாத்துக்கு இண்ணு ஒரு
கேள்வி கேக்கறே?

விக. நண்ணா கேட்டைங்கோ ஒரு முட்டாள் கேள்வி. நானுங்
கேக்கரே, என்னாத்துக்கு உங்களுக்கு வயித்தியன்? என்னாத்துக்கு?

வ. எனக்கு என்னா புத்தி கெட்டுபோயிருக்குதா?

விக. என்னமா கெடும்? அது இருந்தா அல்லவோ கெட?
அது இல்லவே யில்லயே என்னமா கெடும் அது?

வ. சந்தேகமில்லை! இந்த வயித்தியனுக்கு பயித்தியம் புடிச்சி
யிருக்குது!

விக. சந்தேகமில்லை! வயித்ய மிண்ணா என்னா, பயித்திய
மிண்ணா என்னா? வயித்தியரெல்லாம் பயித்தியம் புடிச்சிப்
போனவங்கதானே.

வ. உம் -வயித்தியரு என்னா மருந்து கொடுப்பாரு?

விக. ஏ!என்ன கொடுக்கப்போறாரு? நேர்வாளம், கீர்வாளம்,
ஒரு பத்து பலம் கொடுக்கப்போறாரு அவ்வளவுதான்.
அப்றம் கொடுக்றதெது? அத்தோடே சரி!