|
|
வா? சபையில் இந்தப் பத்மாவதியின்
சிம்மாசனத்திலேயே
மஹாராஜா என்னைத் தமதருகில் உட்காரவைத்துக்
கொள்ளும்படி செய்கிறேன்! இனி நான் தாமதிக்கலா
காது, உடனே மஹாராஜாவிடம் போகவேண்டும்.
(போகிறாள்.)
|
காட்சி
முடிகிறது.
மூன்றாம் காட்சி.
இடம்:- அரண்மனையில் வசந்தசேனையின் இருப்பிடத்தைச்சார்ந்த ஓர்
விடுதி.
காலம் - மாலை.
வசந்தன் வேகமாய் ஓடி வருகிறான். விகடன் மெல்லப் பின்புறமாக
வருகிறான்.
|
| வ.
|
சந்தேக
மில்லை!
|
| விக.
|
சந்தேக
மில்லை!
|
| வ.
|
கொஞ்சங்கூட
சந்தேக மில்லை.
|
| விக.
|
கொஞ்சங்கூட
சந்தேக மில்லை.
|
| வ.
|
சந்தேக
மில்லை ஐயா, இண்ணா!
|
| விக.
|
ஆமையா,
சந்தேகமே யில்லை!
|
| வ.
|
என்னத்துக்கு?
|
| விக.
|
ஆ!-
அதுதான் உங்களெக் கேக்கணுமிண்ணு இருந்
தேன்; என்னாத்துக்குச் சந்தேகமில்லை?
|
| வ.
|
உலகங்
கெட்டுப் போச் சையா இன்றேன்!
|
| விக.
|
சந்தேகமில்லை,
உலகந்தான் கெட்டுப் போச்சே, கேட்பா
னேன்?
|
| வ.
|
ஐயா,
ஒரு பேச்சு சொல்றேன், உலகம் கெட்டுப் போச்சு,
கெட்டுப் போச்சு உலகம், போச்சு கெட்டு உலகம்!
பூட்டுது! பூட்டுது! பூட்டுது!
|