| வனை.
|
ஆம், ஆம்! என்ன சமாசாரம்? என்ன சொல்லச்
சொன்னார்?
|
| தோ.
|
இளவரசர் ஜெயம்பெற்று நம்முடைய பட்டணத்தை
நோக்கித் திரும்பி வருவதாகவும், அதிவீரசேர மஹா
ராஜனுடைய வஜ்ர சிங்காதனத்தைப் பாண்டிய
னிடமிருந்து மீட்டுத் தன் தாயாரிடம் இளவரசர்
அனுப்பியிருக்கிறதாகவும் சொல்லச் சொன்னார்.
|
| வனை.
|
எங்கே அந்த சிம்மாசனம்? பத்மாவதியிடம் போய்ச்
சேர்ந்துவிட்டதா?
|
| தோ.
|
இல்லை, இப்பொழுதுதான் அதை மஹாராஜாவுக்குக்
காண்பித்துவிட்டு அந்த அரண்மனைக்கு எடுத்துச் செல்
கிறார்கள் சேவர்கள்.
|
| வனை.
|
நீ உடனே ஓடிச்சென்று, அந்த ஆட்களை நான் கட்டளை
யிட்டதாகக்கூறி, மறுபடியும் மஹாராஜாவிடம் அதை
எடுத்துப்போகச் சொன்னதாகச் சொல். விரைந்து செல்!
பத்மாவதியிடம் அந்தச் சிம்மாசனம் போய்ச் சேருமாயின்
உன்னை அரண்மனையினின்றும் நீக்கிவிடுவேன்.
|
| தோ.
|
ஒரு வேளை பட்டமகிஷி கோபித்துக் கொண்டால்-
|
| வனை.
|
பட்டமகிஷியாவது! யார் பட்டமகிஷி? நான்தான்
பட்டமகிஷி! போ, நான் சொன்னபடி செய். இல்லா
விட்டால் மஹாராஜாவிடம் கூறி உன்னைச் சிரச்சேதம்
செய்துவிடும்படி செய்வேன்! என் முன்னில்லாதே!
[அறைக்கு வெளியில் பிடித்துத் தள்ளுகிறாள்.] சீ! என்ன
தான் மஹாராஜா என் கைவசத்திலிருந்தாலும், பலருக்கு
முன்பாக சபையில் என்னைத் தமது மனைவியாக
ஏற்றுக்கொள்ளும்படிச் செய்யாவிட்டால் என் பெருமை
எதற்குதவும்? சீ! இதைவிட இறப்பதே மேலாகும்!-
ஆம், ஆகட்டும்! நாளைத்தினமே மஹாராஜா என்னைப்
பத்மாவதிக்குச் சமானமான ஸ்திதியில் பலரறிய ஏற்றுக்
கொள்ளும்படி செய்யாவிட்டால் நான் வசந்தசேனை
யன்று! நாளை நவராத்திரிகொலுவின் முதல் நாளல்ல
|