|
|
இவ்வுடைவாளை இக்கோலத்துடன் கொணர்ந்து, தாம்
பகைவரால் உறங்கும் பொழுது மரண காய மடைந்து
இறந்ததாயும், இறப்பதன்முன் இவ்வுடைவாளை அறி
குறியாகத்தம தன்னைக் கனுப்பி, தாம் சென்ற விடத்
திற்கு அவர்களையும் சீக்கிரம் வரும்படி வேண்டியதாயும்
கூறினான்.
|
| ரா.
|
அரசே ! ஏன், இப்பொழுதாவது என் சொல்லை நம்
புவீரா? அப்பொழுதே இதில் ஏதோ சூதிருக்கிறதெனக்
கூறினேனே !
|
| ம.
|
ராஜப்பிரியா ! நம்பினேன் ! நம்பினேன் ! தோழா, எனது
யிரை இரண்டாம் முறை காப்பாற்றினை. அப்பா, உனக்கு
நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன்?
|
| ரா.
|
எனக்கு நீர் செய்யவேண்டிய கைம்மாறொன் றிருக்கிறது.
இந்த மஹானுபாவர் அங்கிருந்து வந்த வேகத்தில்
உடம் பெல்லாம் மாசு படிந்திருக்கிறது. அதற்காக, கை
கால்களைக் கட்டி இவருக்கு நான் காவிரி ஸ்நானம் செய்
விக்க வேண்டும், உத்திரவளியும்.
|
| ம.
|
செய் அப்படியே ! நானே கொன்றிருப்பே னிவனை !
|
| ப.
|
மனோஹரா, பொறு, அப்படி யொன்றும் செய்ய வேண்
டாம், நாம்தான் இப்பெரிய ஆபத்தினின்றுந் தப்பினோமே,
ஐயோ பாவம் ! இவன் பிழைத்துப்போகட்டும்,
அவனை விட்டுவிடுங்கள்.
|
| ரா.
|
என்ன அம்மணி, இப் பாதகனையா விட்டுவிடும்படிச்
சொல்லுகிறீர்கள்? உங்களை யெல்லாம் அழிக்கப் பார்த்
தானே சற்று முன்பாக ! இதனை மறந்தீரோ இதற்குள்
ளாக ! இவனைத் தண்டியாது உயிருடன் விடுதலே பாபம் !
|
| ப.
|
அப்படி யல்ல, இவன் தானாகச் செய்திருக்கமாட்டான்.
யாரோ ஏவியிருக்கவேண்டு மிவனை !- அப்பா, இனி இம்
மாதிரியான தீய தொழிலிற் பிரவேசியாது புத்திசாலி
யாக வாழ்.
|