| ம.
|
அட பாதகா ! யாருடைய உயிரைப் போக்கப்பார்த்
தனையோ அவர்களுடைய கருணையினால் உன் உயிர் தப்
பினை. இனிமேலாவது இம்மாதிரியான துர்க்கிர்த்தியங்
கள் செய்யாதே, போ.
|
| ப.
|
நீ
யேன் இவ் வேலையில் கை யிட்டுக்கொண்டாய்? நாங்
கள் உனக்கென்ன தீங்கு செய்தோம்? நீ யார்?
|
| பௌ.
|
அம்மணி, என துயிரைக் காப்பாற்றினீர்கள் !
இதை
நான் மறவேன். நான் சந்நியாசி யன்று, பௌத்தாயனன் !
|
எல்லோரும்.
பௌத்தாயனன் !
|
| பௌ.
|
ஆம்,
வசந்தசேனையினுடைய ஏவலினால் இத்தொழி
லிற்கு உடன்பட்ட பௌத்தாயனன் நான் !
|
| ம.
|
ஆ !
அப்படியா சமாசாரம்?
[பௌத்தாயனன்
தலையைச்
சேதிக்க
உடைவாளை
வீசுகிறான்.
பத்மாவதி
அவனைத்தடுக்கிறாள்.]
|
| ப.
|
மனோஹரா !
இவனுக்கு நான் உயிர்ப் பிச்சை தந்தபின்
இவனை நீ கொல்லலாகாது ; விட்டுவிடு, அவன் போகட்
டும்- விட்டுவிடு என் சொற்படி.-
|
| ம.
|
ஆம் ! -
சீ ! அற்பனே, பிழைத்துப்போ ! உன்னைக் கொல்
வதில் என்ன பயன்? அந்த வசந்தசேனையை யல்லவோ
கொல்லவேண்டும்.
|
| பௌ.
|
அம்மணி,
இரண்டாம் முறை எனது உயிரைக் காத்தீர் !
-இளவரசே. இதை நான் என்றும் மறவேன் ! உமக்கு
ஓர் ஆபத்தில் எப்படியாவது நான் இறப்பதன்முன் உத
வுகிறேன் பாரும் ! -நான் போகுமுன் ஒன்று கூறுகி
றேன். வசந்தசேனை உயிருட னிருக்குமளவும் உமது
உயிருக்கு ஹானிதான் ! மறவாதீர் ! [போகிறான்.]
|
| ம.
|
அந்த
வசந்தசேனையை இப்பொழுதே கொன்றுவிட்டு
வருகிறேன். இதுவரையில் ஓர் காரணம் வேண்டுமே
என்று பொறுத்திருந்தேன். இனி நான் ஒரு க்ஷண
மேனும் தாமதியேன்.
|