| ப.
|
மனோஹரா, வா இப்படி-உட்கார்-யுத்தத்திற்குப்
போய் ஜெயம்பெற்று வந்தவன் சற்று நேரமாவது என்
னிடம் பேசிப்போவதை விட்டு எங்கேயோ திடீரென்று
போய்விடுகிறாயே !
|
| ம.
|
ஆமாம், அம்மணி, மன்னிக்க வேண்டும். [உட்கார்ந்து]
அம்மா, உமது கட்டளைப்படி முத்துவிஜயனைக்
கொன்று, எனது பாட்டனாருடைய சபதத்தை நிறை
வேற்றினேனோ இல்லையோ?
|
| ப.
|
கண்ணே, உன் வாக்கை நிறைவேற்றினாய் ! சந்தேக
மில்லை. என் மனம் இப்பொழுது குளிர்ந்து சந்தோஷ
மடைந்தது போல, எப்பொழுதும் நீ ஒரு தீங்கு மின்றி
நீடூழி காலம் சந்தோஷமாய் வாழ்வாயாக ! ஆயினும்
கண்ணே, இதைவிட நீ எனக்குச் செய்யவேண்டிய
பெரிய உபகார மொன் றிருக்கிறது, அதைச் செய்வாயா
கண்ணே?
|
| ம.
|
[உடைவாளை வீசி] சொல்லும், இந்தக்ஷணம் செய்கிறேன் !
வசந்தசேனையைக் கொன்று வரவா?
|
| ப.
|
முதலில் இவ் வுடைவாளை உரையில் போடு.-நீ மஹா
ராஜாவுக்காவது வசந்தசேனைக்காவது என் அனுமதி
யின்றி உன்னுயிருள்ளளவும் ஒரு தீங்கும் செய்வதில்லை
யென்று பிரமாணம் செய்துகொடு.
|
| ம.
|
அம்மா, இதென்ன இப்படி கேட்கிறீர்கள்? வசந்தசேனை
உமக்கு இதுவரையிற் செய்த தீங்கெல்லாம் போதா
தென்று முடிவில் நமதுயிருக்கெல்லாம் ஒரே உலையாக
வைத்தாளே சற்று முன்பாக ! இதை மறந்துவிட்டீரா
என்ன இதற்குள்ளாக? அவளை நான் தண்டியாது விட
மாட்டேன் ; வேண்டுமென்றால், மஹாராஜாவை நான்
ஒன்றும் செய்யவில்லை யென்று பிரமாணஞ் செய்து
தருகிறேன்-
|
| ப.
|
அப்படி வேண்டா மெனக்கு, நான் சொன்னபடி
கையடித்துக்கொடுப்பாயானால் ஏற்றுக்கொள்ளுகிறேன்.
|