|
|
இல்லாவிட்டால் ஒன்றும் எனக்கு வேண்டாம். ஜெயம்
பெற்றுவந்த மனோஹரன், தன்னைப் பெற்ற தாயார்
கேட்கும்படியான ஒருவரத்தைக் கொடுக்க அசக்தனானா
னெனப் பலர் நகைப்பார்கள் நாளை ; இந்தப் பழிச்
சொல்லைப் பெற உனக்கு விருப்பமானால் உன்னிஷ்டப்
படிச் செய்.
|
| ம.
|
ஐயோ ! அப்படி ஒன்றுமில்லை யம்மணி ! நீர் கேட்பதை
நான் மறுப்பேனோ? ஆயினும் எதற்காக இப்படிப்பிரமாணம்
செய்யும்படி கேட்கிறீர்?
|
| ப.
|
காலம்வரும்பொழுது நியாயம் கூறுகிறேன். இப்பொ
ழுது என் சொற்படி செய்கிறாயா மாட்டாயா?
|
| ம.
|
அப்படியே ஆகட்டும், அம்மணி. [ சத்தியம் செய்கிறான். ]
|
| ப.
|
சத்தியசீலரே, ராஜப்பிரியா, விஜயா, நீங்களெல்லோரும்
சாட்சி-மனோஹரா, இதை மறவாதே.
|
| வி.
|
பிராணநாதா, எனக்கொரு வரம்வேண்டும்.
|
| ம.
|
சரி ! உனக்கென்னவரம் வேண்டும்? நானினி யுத்தத்திற்
கே போகலாகாதெனக் கேட்டுவிடு. பிறகு அரண்மனை
யில் அந்தப்புரத்தில் உட்கார்ந்துகொண்டு கழலாடிக்
கொண்டிருக்கிறேன்.
|
| வி.
|
அப்படி யில்லை, பிராணநாதா. இனி, என்னிடங் கூறிய
படியே எப்பொழுதும் நடக்கிறதாக வாக்களியும்.
|
| ம.
|
என்ன அப்படி நான் நடவாமற்போன திதுவரையில்?
|
| வி.
|
இன்றைத்தினம் வருவதாகக் கூறிவிட்டு நாளைத்தினம்
வரப் பார்த்தீரே !
|
| ம.
|
ஓஹோ ! வாஸ்தவந்தான். என் சொற்படி நடவாதிருந்
தேனாயின் என்னென்ன தீமைகள் நேர்ந்திருக்கும் ! இதி
னின்றும் ராஜப்பிரியன் தான் காப்பாற்றினான்.
|
| ரா.
|
அம்மா, உங்களுக்கு சமாசாரம் தெரியாதோ? ஐஐயோ !
நான் பலவந்தப்படுத்தி யல்லவோ அழைத்துக்கொண்டு
வந்தேன். அங்கே ஒரு ஸ்திரீயைக் கலியாணம் பண்
|