|
நல்ல வெகுமானம் குடுத்து வீட்டுக் கனுப்பிச்சுடணும்
இல்லாப்போனா அவர் கொடுக்கர மருந்தெ, அவரே
திண்ணுட கட்டளெ யிடுங்க.
|
பு.
|
ஸ் ! விகடா என்ன செய்கிறாய் அங்கே? வசந்தனைப்
பேசாமலிருக்கும்படிப் பார்த்துக்கொள்.
|
வன்.
|
சந்தேக மில்லை மகாராஜா !
|
விக.
|
ஆமாம் கொஞ்சங்கூட சந்தேகமில்லை, உக்காருங்கையா !
[இழுத்து
உட்காரவைக்கிறான். ]
ஓர்
சேவகன் வருகிறான்.
|
சே.
|
பராக் ! மந்திரி சத்தியசீலர் அவர்கள்
குரு மகாராஜாவை
அழைத்துக்கொண்டு வருகிறார்.
[மஹாராஜா
சபையுடன் எழுந்து
நிற்கிறார். ]
குரு சத்தியசீலருடன்
வருகிறார்.
|
பு.
|
குருசுவாமி, நமஸ்காரம்- வரவேண்டும், வரவேண்டும்.
[நமஸ்கரிக்க
குரு ஆசீர்வதிக்கிறார். ]
தாங்கள் இப்படி எழுந்தருளவேண்டும்.
[குரு
உட்கார எல்லோரும்
உட்காருகிறார்கள். ]
|
குரு.
|
புருஷோத்தமா, எல்லாம் க்ஷேமந்தானா?
|
பு.
|
தங்களுடைய கிருபா நோக்கத்தால் எல்லாம் க்ஷேமந்
தான்.
|
குரு.
|
உன் மகன் மனோஹரனுடைய வெற்றியைக்கேட்டு மிக
வும் சந்தோஷப்பட்டோம், சிரஞ்சீவியாக வாழ்வானாக !
அவனைப் பார்த்து ஆசீர்வதித்துப் போகவே இங்
கெழுந்தருளினோம். பத்மாவதியின் மகன் சுத்தவீரனானது
ஓராச்சரியமன்று ! -புருஷோத்தமா, உன் பக்கலி
லிருப்பது பத்மாவதி யல்லவா?
|