இரண்டாவது
அங்கம்.
முதற் காட்சி.
இடம்-மஹாராஜாவின் கொலு மண்டபம், காலம்-பகல்.
புருஷோத்தம மஹாராஜன் சிங்காதனத்தின் மீது வசந்தசேனையுடன்
வீற்றிருக்கிறார். ஒரு புறமாக வசந்தன், விகடன், அமிர்தகேசரி
முதலானோர் உட்கார்ந் திருக்கிறார்கள்.
மற்றொருபுறம் ரணவீரகேது முதலான மந்திரி பிரதானிகள்
நிற்கிறார்கள். சுற்றிலும் தளகர்த்தர் சபையோர்
சூழ்ந் திருக்கிறார்கள், வசந்தசேனையின் பின்புறமாக தாதியர் சாமரம்
முதலிய தாங்கி நிற்கின்றனர்.
|
பு.
|
ரணவீரகேது சபையோரே உங்களுடைய வேண்டு
கோளுக்கு மெச்சினோம். இன்றைத்தினம் காலையிலே
இதே விஷயத்தைப்பற்றி நமது முதன் மந்திரி சத்திய
சீலர் கேட்க, அப்பொழுதே அதற்குடன்பட்டு, மனோ
ஹரனுக்கு இளவரசு பட்டம் கட்டத் தீர்மானித்திருக்கிறோம்.
|
எல்லோரும்.
|
மிகவும் சந்தோஷம். மஹாராஜா !
|
வன்.
|
மாகாராஜா ! சந்தேகமில்லை, மகாராஜா !
|
பு.
|
வசந்தா !
|
வன்.
|
கொஞ்சங்கூட சந்தேகமே யில்லை, மகாராஜா !
நீங்க
வோணு மிண்ணா விகடரெ கேட்டுப் பாருங்கோ.
|
பு.
|
விகடா, என்ன சமாசாரம் அது?
|
விக.
|
எனக் கொன்றுந் தெரியாது, மஹாராஜா.
|
வன்.
|
அப்பா ! நானு உங்களே ஒண்ணு கேக்கிறேன்.
நம்ப
அமிர்தவேசரி ரொம்ப நல்ல பயித்தியரு ; அவருக்கு
|