சரி, நேரமாகிறது அம்மணி, நாங்கள் விடை பெற்றுக் கொள்ளுகிறோம் ; சைனியங்க ளிறங்கியிருக்கும் இடம் சென்று நாளைத்தினம் காலை மஹாராஜாவின் கொலு விற்கு அப்படியே போகவேண்டி யிருக்கிறது.- விஜயா, நான் வருகிறேன்- ராஜப்பிரியா, வா போவோம் ; நெடு நேரமாய்விட்டது.
சுகமாய்ப் போய்வாருங்கள், ஜாக்கிரதை. [மனோஹரன் சத்தியசீலர் ராஜப் பிரியன் போகிறார்கள். ]
காட்சி முடிகிறது.