|
|
பற்றென்
பதைப்பெற் றறியேன்
பகருவதென்னே
நான்தான்.
உம்-உம்-இருக்கும் ! இருக்கும் !
|
| ம.
|
ராஜப்பிரியா ! சீ ! உண்மையைக் கூறு !
|
| ரா.
|
ஒன்று மில்லை யம்மா. தாம் வருந்தவேண்டாம். வேடிக்
கையாக, வீரலட்சுமியை மணந்தாரெனக் கூறினேன்,
அந்தச் சக்களத்தி உமக்கு ஒரு தீங்குஞ் செய்யமாட்
டாள் ! வருந்தவேண்டாம். [எல்லோரும் நகைக்கிறார்கள்.]
|
| ம.
|
ராஜப்பிரியா, ஆகட்டும், உனக்கும் விவாக மாகட்டும்
உன்னை என்னபாடு படுத்துகிறேன் பார் !
|
| ரா.
|
என்னையா? நான் கலியாணஞ் செய்துகொள்ளுங் காலத்
தில் பார்த்துக்கொள்வோம் ; உம்மைப் போலவா நான்?
மையிட்ட கண்ணினின்றும் தண்ணீர் வந்தால் உமது
வீரமெல்லாம் எங்கேயோ மறைந்து போய்விடுகிறதே?
இல்லா விட்டால் முத்துவிஜயபாண்டியன் மருமகள்
காலில் வீழ்ந்தழுதாளென்று, சத்ருவின் குமாரன் என்
றும் பாராமல், குலசேகரபாண்டியனுக்குப் பட்டங்
கட்டிவிட்டு வருவீரா நீர்?
|
| ப.
|
கண்ணே, அப்படியா செய்தாய்? மிகவும் சந்தோஷம்.
அதுதான் சுத்தவீரனுக்கு லட்க்ஷணம் ! பகைவரைப்
பொறுப்பதே மேன்மை.
|
| ரா.
|
சரி, அவருடைய அன்னையல்லவா தாங்கள் ! என்னஅப்பா
இப்படிப்பகைவருடன் உறவாடலாமா என்று கண்
டிப்பதைவிட்டு, சபாஷ் என்று தட்டிக்கொடுக்கிறீர்களே !
|
| ம.
|
ராஜப்பிரியா, முத்துவிஜயன்தான் நமக்கு விரோதி,
அவன் குமாரன் நமக்கொரு கெடுதியும் செய்ய
வில்லையே, அவனையும் ஏன் தண்டிக்க வேண்டும்?
|
| ரா.
|
இப்பொழுது ஒரு கெடுதியும் செய்யவில்லை. இனிமேல்
செய்யப்போகிறான். இப்பொழுதே சொன்னேன் பா
ரும், பாம்பின் வயிற்றில் பாம்புதான் பிறக்கும்.
|