| குரு.
|
[ஆசிர்வதித்து ] பாண்டிய கோளரியாகிய
மனோஹரா ! உல
கெங்கும் உனது புகழ் பரவ இப்புவியனைத்தும் ஒரு
தனிக் குடைக்கீழ் ஆளும் சக்ரவர்த்தி யாவாயாக !
[ மனோஹரன்
சிங்காதனத்திற்கு
இன்னும்
அருகிற் செல்ல, வசந்
தசேனை
அதன்மீது வீற்றிருப்
பதைக்
கண்ணுற்று கோபாவே
சத்துடன்
வாளைவீசப் போக,
சபையோரெல்லாம்
நடுநடுங்கி
"பொறும்!
பொறும் !", எனக்
கூவுகின்றனர். ]
|
| குரு.
|
மனோஹரா ! வேண்டாம் ! வேண்டாம் ! இது நியாய
மன்று பொறு ! பொறு !
|
| சத்.
|
[ மனோஹரன் காதில் ] அரசே, தம்முடைய
தாயாருக்குக்
கூறியதை மறவாதீர் !
[ மனோஹரன்
க்ஷண நேரம் அசை
வற்று
நின்று பிறகு தன் வாளை
உரையி
லிட்டுத் தலை குனிந்த
வண்ணம்
சபையை விட்டுச்
சரேலெனப்
போகிறான் ; சபை
யில்
பெருங் கூச்சல் உண்டாகிறது. ]
|
| குரு.
|
புருஷோத்தமா ! நான் முன்னமே கூறினேனே, கேட்ட
னையா? இதனால் இப்பொழுது என்ன கோலாகலம்
நேரிடப் போகிறதோ தெரியாது. இந்நேரம் நீயும் உன்
பக்கலிலிருக்கிறவளும் இறக்க விருந்தீர்கள் ! நான்
தடுத்தபடி யாலன்றோ மனோஹரன் சற்று கோபம்
தணிந்து சென்றான் ! அவன் முனிந்தால் மூவுலகும்
பொடியாய் விடும், ஜாக்கிரதை ! இப்பொழுதே சொன்
னேன். இனியாவது என்சொற்படிகேட்டு மனோஹர
னைச் சாந்தப்படுத்தினால் நீ இன்னும் கொஞ்ச காலம்
சுகமாய் வாழலாம். இல்லாவிடின் உனது நாசகாலம்
சீக்கிரத்திற் கிட்டியதென நினை ; சுத்தவீரனாகிய மனோ
ஹரன் சத்தியத்திற்குட்பட்டவன், ஆகவே பிதாவா
யிற்றேயென்று பார்த்தான்போலும். அவன் வாளா
சென்றானே என்று நினையாதே ; உனது பகைவரை வெற்றி
|
|
|
|