|
|
கொண்டு மீண்ட சத்தியவானாகிய உன்மைந்தன்
கண்ணினின்றும் ஓர் நீர்த்துளி விழுமாயின், அது
உனது ராஜ்யத்தை யெல்லாம் க்ஷணப் பொழுதில் பஸ்
மீகரப்படுத்தும் ஆலகால விஷமென எண்ணுவாய் !
என்ன சொல்லுகிறாய் இப்பொழுதாவது?-சரி, குல
குருவாகிய என் கடனை ஒழித்துவிட்டேன். இனி உன்
தலைவிதி ! உனது விநாசகாலத்திற்கே உனக்கு இவ்வித
விபரீத புத்தி தோற்றுகிறது ! நான் இனிமேல் இங்கி
ருப்பது நியாய மன்று. நான் போகிறேன்.
|
| சத்.
|
சுவாமி, தாங்களிவ்வாறு கோபித்துச் செல்லலாகாது-
|
| குரு.
|
சத்தியசீலா ! என்னிடம் நீ பேசுவதிற்
பயனில்லை, உன்
அரசனுக்குப் புத்திகூறு, போ !
[கோபத்துடன் போகிறார். சபை
யில் மறுபடியும் ஆரவாரம் உண்
டாகிறது. ]
காட்சி முடிகிறது.
இரண்டாவது காட்சி
இடம் :- அரண்மனை நந்தவனம். காலம் :- மாலை.
|
வசந்தன்
தலைமுழுவதும் புஷ்பச் சரங்கள் தொங்க உடல் எல்லாம்
மஞ்சள் நீரால் நனைக்கப்பட்டு அலங்கோலமாய் ஓடிவருகிறான்.
|
| வன்.
|
ஆ ! சந்தேகமில்லை ! சந்தேகமில்லை !
இதான்சரியான
எடம்.
[ஓர் கல்லாசனத்தின் கீழ் மறைந்து கொள்கிறான்.]
பத்மாவதிதேவி மெல்ல வருகிறாள்.
|
| ப.
|
கொடுத்துவைத்தவர்கள் அனுபவிக்கிறார்கள்.
அவர்
களைப் பார்த்து நான் பொறாமைப்படலாகாது.- இங்குச்
சற்று உட்காருவோம் ; இங்கொருவரும் வரமாட்டார்
6
|