பக்கம் எண் :

42மனோஹரன்[அங்கம்-2

களென நினைக்கிறேன். - ஹா !  என் ஜன்மமே ஜன்மம் ! 
எவ்வளவுதான் பொறுப்பது? எதற்கும் ஓர் அள
வில்லையா?-ஆயினும் நான் என்பொருட்டு வருந்த
வில்லை, என் விதி எனக்கு சகஜமாய்விட்டது. என்
பொருட்டு மனோஹரன் வருந்துகிறானே, அதைத்தான்
பொறுக்கமுடியவில்லை. தான்படும் வருத்தத்தை எவ
ரிடமாவது கூறுகிறானா? என்னிடமாவது கூறுகிறானா?
ஒன்றுமில்லை ;  தனக்குள் நினைந்து நினைந்து வருந்து
கிறானே !  ஐயோ !  அவனுடைய கைகால்களை நானல்ல
வோ கட்டிவிட்டிருக்கிறேன்? சுத்தவீரனாகிய மனோ
ஹரனோ இந்த அவமானத்தைப் பொறுப்பவன்? தன்
மானத்தைத் தன்னுயிரினும் மேலாகப் பாவிக்கின்றவன்,
தனக்கு நேரிட்ட இழிவைக் கண்ணாரக்கண்டும், வாளா
இருப்பவனோ அவன்? -கண்ணே !  மனோஹரா !  நம
தன்னை இவ்வளவு அவமானத்தை நேரிற் கண்டும்
பொறுக்கும்படி செய்து, பழி வாங்கவொட்டாமல்
வாக்கால் நம்மைக்கட்டி விட்டாளல்லவா என்று நினைந்
தே கண்ணீர் விட்டனையோ? கண்ணே !  உன் நலத்
தைக் கோரியே இவ்வாறு செய்தேன் !  நமதன்னைக்காக
இவ்வளவு பொறுக்கிறோமென நினைத்து சும்மா இரு-
அம்மட்டும் இப்படி ஏதாவது நேரிடுமென்று முன்பே
மனோஹரனிடம் இவ் வுறுதிமொழி வாங்கிக்கொண்
டது நம ததிர்ஷ்டனே ! -வழக்கப்படி சாயங்காலம்
என்னைப் பார்த்துவிட்டுப் போக வருபவன் இன்றைத்
தினம் ஏன் வரவில்லை? இவ்வுற்சவங் கொண்டாடுமிடத்
திலாவது இருப்பானெனக் கருதி இங்குவந்து பார்த்
துங்காணோம். இன்னும் காலையில்நடந்த விஷயத்தைக்
குறித்து நினைத்துவருந்திக் கொண்டிருக்கிறானோ? அல்
லது பழிவாங்க ஏதாவது வகைதேடிக்கொண்டிருக்கி
றானோ?-என் அனுமதியின்றி அவ்வண்ணம் ஒன்றும்
செய்யான்- கண்ணே !  மனோஹரா !  உனது நலத்திற்கு
நானே சத்ருவானேன்போ லிருக்கிறதே ! ஐயோ !  என்