பக்கம் எண் :

காட்சி-2]மனோஹரன்43

வயிற்றிற் பிறந்த கொடுமையோ அது?-ஈசனே !  ஈசனே ! 
நான் எவ்வளவுதான் பொறுப்பேன்?-
                             [கண்ணீர் விடுகிறாள்.] 

   மனோஹரன் பின்புறமாக மெல்லவந்து பத்மாவதி
             அருகில் உட்காருகிறான்.

ப. கண்ணே !  மனோஹரா !  எங்கே இதுவரையில் உன்னை
அரண்மனையிற் காணோம், நான் எங்கும் சுற்றிப்பார்
தேனே?

ம.

நானும் உம்மைத் தேடி அரண்மனை யெங்கும் சற்று
முன்பாகச் சுற்றி வந்தேன்.

ப. என்ன சமாசாரம்? ஏதாவது முக்கியமுண்டோ?-என்ன
நீ சற்று முன்பாக அழுதுகொண்டிருந்தாற்போ லிருக்
கிறதே?

ம. அம்மா, என்னை மன்னிக்கவேண்டும். நானும் உங்களை
அதே கேள்வி கேட்க வாயைத்திறந்தேன்- அம்மணி,
என்ன சமாசாரம்?

ப. மனோஹரா, ஏன் என்னிடம் ஒளிக்க முயலுகிறாய்? இன்
றைத்தினம் காலை கொலு மண்டபத்தில் நடந்த விர்த்
தாந்தமெல்லாம் தெரியும் எனக்கு.

ம. யார் சொன்னது?

ப. யார் சொன்னாலுமென்ன?-சத்தியசீலர் சொன்னார்-
கண்ணே, அது என் தலைவிதி, அதற்காக நீ வருத்தப்
படுவானேன்?

ம.அம்மணி, நான் எவ்வாறு பொறுப்பேனிதை? உமக்குப்
பணிப்பெண்ணாயிருந்த அந்த வசந்தசேனை, மஹாராஜா
வின் அருகில், நான் தமக்காகக் கொணர்ந்த சிங்காதனத்
தில், நீர் உட்கார்ந்திருக்கவேண்டிய ஸ்தானத்தில் உட்
கார்ந்திருப்பதைக் கண்டும் நான் பொறுத்திருக்க வேண்
டியதாயிற்றே !  அம்மணீ !  வீணில் என் கையைக் கட்டி
விட்டீரே !  அதை நான் என் கண்ணாக் கண்டு எவ்வாறு