|
|
தியசீலருக்கும் கொடுத்துவிடு. மஹாராஜாவுக்குக்கொடுக்
கும்பொழுது வேறொருவரு மில்லாத சமயம் பார்த்துக்
கொடு. இதில் ஒன்றும் தவறில்லை. ஆயினும் ஒருவரு
மறியாதபடி கொடு, தெரியுமா?
|
| நீ.
|
அம்மணி, அப்படியே செய்கிறேன். தங்களுடைய
வார்த்
தைக்குக் குறுக்குண்டோ? எப்படியாவது மஹாராஜா
வும் தாங்களும் ஒருமைப்பட்டுச் சுகமாய் வாழ்ந்தாற்
போது மெனக்கு,
|
| ப.
|
நீலவேணி, அப்படி ஒன்றுமில்லை. இதுவேறு
சமாசாரம்.
நான் சொன்னபடி செய், போ சீக்கிரம்.
|
| நீ.
|
அப்படியே ஆகட்டும், அம்மா. [போகிறாள்.]
|
| ப.
|
நாமினி போவோம் வா. [போகிறார்கள்.]
|
|
காட்சி முடிகிறது.
நான்காவது காட்சி
இடம் :- அரண்மனையில் ஒரு மூலை.
காலம்-காலை.
விகடன் தள்ளாடிக்கொண்டு வருகிறான்.
|
| விக.
|
இதென்னமோ சமாசாரம் தெரியலே? என்னமோலேகி
யம் தித்தீச்சிக்கினு இருந்துதுண்ணு எடுத்து சாப்பிட்
டுட்டேன் வயித்தியர். பொட்டியிலே யிருந்து, அது
நம்மெ தள்ளுது. பூர்ணாதி லேக்யம்-நல்ல லேக்யம் !
[கீழே
விழுகிறான். ]
வசந்தன்
ஓடி வருகிறான்.
|
| வ.
|
ஐயா ! ஐயா ! விகடரே ! எழ்ந்திருங்கையா !
|
| விக.
|
எங்கே?-லேக்கியம் !
8
|