வ.
|
இங்கே வயித்தியரு வந்து கேட்டா, நானு
இங்கே
இல்லே இண்ணு சொல்லிடுங்கோ-தெரியுமா? சந்தேக
மில்லை நானு இங்கே ஒளிசிக்கிறே !
[மூலையில்
ஒளிந்துகொள்கிறான். ]
|
விக.
|
சர்தான், சர்தான்- ரொம்ப நண்ணா இருக்குது
லேக்யம் !
அமிர்தகேசரி
வருகிறான்.
|
அ.
|
எங்கே காணோம்? இங்கேதான் ஓடி வந்தாற்போலிருக்
கிறது. இதோ, விகடர் படுத்திருக்கிறார். இவரைக்
கேட்போம்- ஐயா, விகடரே,-
|
விக.
|
லேக்யம் ! லேக்யம் ! -
|
அ.
|
என்ன லேக்யம் ! ஐயா, சற்றெழுந்திருமையா ! பகற்
பொழுதில் தூங்கலாகாதென்று தன்வந்திரி கௌசிகர்
கலைக்கோட்டுமுனி முதலிய பெரியோர்கள் வயித்திய
சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறார்களையா ; எழுந்திரும்,
இதென்ன தூக்கம்?
|
விக.
|
அல்லாம் பூர்ணாதி லேக்யந்தா, போங்கையா !
|
அ.
|
பூரணாதி லேகியந்தானா ! என்ன விளையாடுகிறீர்? வசந்தர்
எங்கே பார்த்தீரா?
|
விக.
|
என்னாயா தொந்தரவு பண்ரிங்கோ? என்னையா வோ
ணும்?
|
அ.
|
வசந்தர் எங்கே?
|
விக.
|
அல்லாம் அந்த வயித்தியரு பொட்டியிலே யிருக்கும்,
போயி நீங்களும் சாப்பிட்டுவாங்க.
|
அ.
|
ஓஹோ ! நம்முடைய பெட்டியிலிருந்து பூரணாதி லேகி
யத்தைத் திருடிச் சாப்பிட்டுவிட்டு மயங்கிக்கிடக்கிறார்
போலிருக்கிறது ! -ஐயா விகடரே, அது போனாற்போ
கிறது, வசந்தர் எங்கே?
|
விக.
|
வசந்தனா? அதோ அங்கே இல்லே, போயி
பாத்துக்
குங்கோ வேணுமிண்ணா ! [ மறுபடியும் படுத்துக்கொள்கிறான். ]
|