அ.
|
இதென்ன கஷ்டம் ! அங்கே போய்ப் பார்ப்போ மெதற்
கும்.
|
வ.
|
[ மூலையிலிருந்து ] ஐயா ! விகடரே ! அந்த
வயித்தியரு
வந்தா இல்லேயிண்ணு சொல்லிடுங்கோ, தெரியுமா?
|
அ.
|
ஓ ! ஆசாமி உள்ளே யிருக்கிறார்- வாருமையா வெளியே.
|
வ.
|
வரட்டுமா?
|
அ.
|
வாரும்.
|
வ.
|
[ வெளியே வந்து ] ஏ ! நீங்களா?
|
அ.
|
நான்தான், தயவு செய்து இந்த மருந்தைச் சாப்பிட்டு
விடுங்கள்.
|
வ. | அதிருக்கட்டுமையா ! - ஐயா விகடரே ! நீங்கதானே என்னெ காம்பிச்சி குடுத்திங்கோ ! சந்தேகமில்லை !
|
அ. | கொஞ்சம் மருந்தைப் புசித்துவிடுங்கள்.
|
வ. | இவரெ கேக்காதே நானு மருந்து சாப்பிடமாட்டே- ஐயா, விகடரே, இந்த மருந்து சாப்பிடலாமா?
|
விக. | என்னா மருந்து, லேக்யமா?
|
அ. | அவர் மயக்கமாய்க் கிடக்கிறார், அவரைக் கேட்பதில் பிரயோஜன மில்லை, ஐயா.
|
வ. | என்ன மருந்து? சொல்லுங்க ஐயா- ஓகோ ! என்ன மானாவெஷங் கொடுத்துக் கொண்ணுடப் பாக்கறிங்க ளோ? வயித்தியரே ! பயித்தரெ அஞ்சி, பத்திரம் !
|
அ. | ஈசனே ! ஜகதீசனே ! -இது நெல்லிக்கனி லேகியம்.
|
வ. | ஐயா, விகடரே, நெல்லிக் கண்ணி லேக்கியமாம், சாப் பிடலாமா?
|
விக. | சீசீ ! அதெல்லாம் ஒதவாத், பூர்ணாதி லேக்யம் சாப் பிடுங்கோ. பலே சொகுசு ! [ மறுபடியும் கீழே விழுகிறான்.]
|
வ. | ஐயா, இது வாணாம் ; பூர்ணாதி லேக்யம் கொடுத்தா கொடுங்கோ, இது வாணாம்.
|