அ.
|
ஐயோ ! பூரணாதியா? அதைச் சாப்பிட்டுவிட்டுதான்
மயக்கம் பிடித்துக் கிடக்கிறாரே இவர், தெரியவில்லை
யா, வேண்டாமையா, இதைப் புசியும்.
|
வ.
|
இது வாணாம், பூர்ணாதிதான் வேணும். சந்தேகமில்லை !
சந்தேகமில்லை !
[ ஒருவரை
யொருவர் சுற்றி யோடி
முடிவில்
இருவருமாக விகடன்
பேரில்
விழ, விகடன் எழுந்தி
ருந்து
இருவரையும் கெட்டியா
கப்பிடித்துக்கொண்டு
கூச்சலிடு
கிறான்.]
வசந்தசேனை
வருகிறாள்.
|
வனை.
|
இதென்ன ! மஹாராஜா இருக்கு மிடத் தருகில்
இவ்
வளவு கூச்சலென்ன? இங்கு யாரும் காவலாளிக
ளில்லையா? உங்களுக் கென்ன வேலை இங்கே? போங்
கள் வெளியே !
[வசந்தன்
ஒருபுறமாக ஓடிப்போ
கிறான். ]
|
விக.
|
அண்ணாத்தே, நம்மே தூக்கிக்கினு போங்க,
அண்ணாத்தே !
[அமிர்தகேசரியைக்
கெட்டியாகப்
பிடித்துக்கொள்ள
அமிர்தகேசரி
அவனை
மெல்ல அழைத்துச்
செல்கிறான். ]
|
வனை. | [ ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டு. ] எனக் கின்னது செய்கிற தென்று தோன்றவில்லை ஒருபுறம், உடனே மஹாராஜா வைப் போய்ப் பார்க்கலாமா வென்று தோற்றுகிறது ; ஒருபுறம் பார்க்கலாகாது என்று தோற்றுகிறது. இப் பொழுது பார்த்தால் ஒருவேளை என்னைக் கண்டதும் கோபம் முன்னிலும் அதிகரிக்குமோ என்னவோ? பாரா விட்டாலோ, அப்படியே இவரது மனம் திரும்பாது நிலைத்துவிட்டால் என் செய்வது? எப்படிப் பார்த்த போதிலும் கஷ்டந்தான் ! என்ன செய்வது?
|