பக்கம் எண் :

காட்சி-4]மனோஹரன்61

நீலவேணி வருகிறாள்.

நீ.

அம்மா, உம்மை அந்தப்புர மெங்கும் தேடி யலைந்துவிட்
டல்லவோ வந்தேன்.

வனை.

என்னவோ முக்கியமாசார மிருக்கவேண்டும்- என்ன
சீக்கிரம் சொல்.

நீ.

பத்மாவதிதேவி மஹாராஜாவுக்கு ஒரு நிருபம் எழுதி
யிருக்கிறார்கள்.

வனை.

பத்மாவதியா? எங்கே அது? மஹாராஜாவிடம் போய்ச்
சேர்ந்துவிட்டதா அது?

நீ.

இல்லை, என்னிடத்தில்தா னிருக்கிறது.

வனை.

கொடு இப்படி !  கொடு இப்படி ! 

நீ.

கொடுத்தால் என்ன தருகிறீர்கள் எனக்கு?

வனை.

என்ன வேண்டுமென்றாலும் தருகிறேன், கொடு இப்படி !  
         [ நிருபத்தை வாங்கிப் பிரித்து வாசிக்கிறாள்.]
'பிராணநாதா, நான் ஏன் தங்களைப்பிராணநாதா என்று
அழைக்கலாகாது? எது எப்படி யிருந்தபோதிலும் தாம்
எனது பிராணநாதர் என்பதை நான் எனதுயிருள்ளள
வும் மறவேன். பிராணநாதா !  நான் எவ்வளவு துயரந்
தான் பொறுப்பேன்? நான் பொறுத்ததெல்லாம் போ
தாதோ? தமக்குப்பிறந்த குமாரனை ஒருத்தி வேசி
மகனென்று கூறத்தாம் சும்மா கேட்டுக்கொண்டிருத்
தல் நியாயமா? இப்பழிச் சொல் தம்மையும் சார்ந்த
தன்றோ? இது நியாயந்தானா? எல்லாமுணர்ந்த தமக்கு
நான் என்ன கூறக்கூடும்? எல்லாம் தம்முடைய சித்தம்.
இங்ஙனம்-பத்மாவதி? - நீலவேணி, அதென்ன?  

நீ.

இதுவும் பத்மாவதி எழுதியதுதான். சத்தியசீலருக்குக்
கொடுக்கும்படி கட்டளையிட்டார்கள்.