வனை.
|
உம் ! அப்படியா?-இதிலென்ன எழுதியிருக்கிறது
பார்ப்போம்- [ நிருபத்தைப் பிரித்து வாசிக்கிறாள். ]
"ஐயா, தாம் இந்த ராஜ்யத்தில் உயிருட னிருக்கும்
பொழுது இப்படிப்பட்ட அநியாயம் நடக்கலாமா?
மனோஹரனை ஒருத்தி வேசிமகன் எனக்கூறினால் தாம்
அதைக்கேட்டுக்கொண்டு வாளாயிருப்பதா? இதுவோ
உம்முடைய நீதி? மிகவும் அழகாயிருக்கிறது ! இது
வரையில் நற்பெய ரெடுத்தது எதற்கு லாபம்? இது
ஒன்றால் உமது புகழெல்லாம் அழியுமன்றோ? தாம் இவ்
வசையைப் பொறுத்துக் கேட்டுக்கொண்டிருந்ததற்கு
சீக்கிரம் நியாயமறிய விரும்புகிறேன். இங்ஙனம், பத்
மாவதி"- ஆஹா ! வசந்தசேனை அதைரியப்படாதே !
-சற்று முன்பாக இனி என்ன இருக்கிறதென ஏங்கி
யிருந்தே னல்லவா? தெய்வம் என்னுடைய பங்கில்
இருக்கிறதென்பதற்குச் சந்தேகமில்லை. நல்லயோசனை!
இந்த யோசனை எனக்கன்றி வேறு யாருக்குத் தோன்றும்?
[ரகசியமாக
நிருபங்களை மாற்றி
விடுகிறாள். ]
நீலவேணி, உன்னையொத்த புத்திசாலிகளுடைய உதவி
யிருக்குமளவும் எனக் கென்ன குறை?
|