பக்கம் எண் :

காட்சி-4]மனோஹரன்63

நீ.

எல்லாம் உம்முடைய பாக்யந்தான்.

வனை.

நீலவேணி, நீ இதுவரையில் எனக்குச் செய்துவந்த உப
காரமெல்லாம் ஒரு பெரிதன்று ;  இப்பொழுது நீ
எனக்கு ஒரு பெரிய உதவி செய்யவேண்டும். செய்கி
றாயா?

நீ.

அம்மணி, அதென்ன அப்படிக் கேட்கிறீர்களே !  சொல்
லும், இந்தக்ஷணமே செய்கிறேன்.

வனை.

சந்தேக மென்ன ! -நீலவேணி, நான் இப்பொழுது
புறப்பட்டுப் போய் மஹாராஜாவிடம் பேசிக்கொண்டி
ருக்கிறேன். நீ தூரத்தில் அவருக்குத் தெரியாதபடி
வந்திருக்கவேண்டும். நான் ஒரு சைகை செய்கிறேன்.
அப்பொழுது உடனே நீ அவரெதிரில் வந்து, இந் நிரு
பத்தை அவருக்குக் கொடுக்கவேண்டும், அவருடைய
மேல் விலாசம் எழுதியிருக்கிறது பார்த்தையா, இதைக்
கொடுத்து, சற்றுதூரத்தில் நின்றுகொண்டிரு. நான்
"ஏன் நிற்கிறாய்? போ" என்று கட்டளையிடுவேன். உட
னே, போகும்பொழுது, அகஸ்மாத்தாய் இந் நிருபம்
உன்னிடமிருந்து கீழே விழுவதுபோல், இதை நழுக
விடவேண்டும் ;  அப்பொழுது மஹாராஜாவாவது நானா
வது "அது என்ன?" வென்று கேட்க நேரிடும், உடனே
நீ மிகவும் பயந்தவள்போல் பாசாங்கு செய்து, இதை
ஒருவரு மறியாதபடி பத்மாவதி சத்தியசீலரிடம் கொடுக்
கும்படி கட்டளையிட்டதாக அவரிடம் கூறவேண்டும்.
பிறகு நடக்கவேண்டிய காரியங்களை நான் பார்த்துக்
கொள்ளுகிறேன். மஹாராஜா இந் நிருபத்தையும் தன்
னிடம் கொடுக்கும்படி கேட்டால் முதலில் இஷ்ட
மில்லாதவள்போல் பாவித்து, பிறகு கொடுத்துவிடு,
தெரியுமா?

நீ.

அம்மா அப்படியே செய்கிறேன். இதில் அணுவளவும்
பிசகேன்.