ஆம், புத்திசாலியாகிய உனக்கு இன்னும் நான் கூற
வேண்டியதில்லை, மறவாதே, நான் சொன்னபடி செய் ;
நான் மஹாராஜாவிடம் போகிறேன். [ போகிறாள். ]
நீ.
நம்மையே என்ன ஏமாற்றப்பார்க்கிறாள்
இந்த வசந்த
சேனை ! இவளும் என்னைப்போல் தாதியா யிருந்தவள்
தானே ! தனக்கிருக்கிற புத்தி எனக்கும் இருக்கு
மென்று நினைக்கவில்லை போலும்? ஆயினும் அதிர்ஷ்ட
வசத்தால் மஹாராணியாய் விட்டாள் ; அவள் சொற்ப
டி நான் நடக்கவேண்டியதானே? எப்படியும் ஆயிரம்
வராகன் பெறும் விதத்தைப்பார்க்கவேண்டும் !
[ போகிறாள். ]