பு.
|
சீ ! இந்த வசந்த சேனையினாலேதான்
நமக்கு எல்லாத்
துன்பங்களும் நேரிடுகின்றன ! பத்மாவதி என்னைப் பார்ப்
பது மில்லை. மனோஹரன் மகத்தான கோபங் கொண்டி
ருக்கிறான். பிரஜைகளெல்லாம் என்னை வெறுக்கிறார்
கள். இனி அதர்ம வழியில் நான் செல்வது நியாய
மன்று. இனிமேலாவது திருந்தி நற்பெய ரெடுக்க
வேண்டும் ; இவ்வசந்தசேனையைப் பார்ப்பதும் தவறு !
- ஆம் ! ஆம் ! வீண் தீர்மானங்கள் ! வீண் எண்
ணங்கள் !ஐயோ ! என் மன வுறுதியை நான் என்னென்
றிகழ்வேன் ! இத் தீர்மானங்க ளெல்லாம் வசந்தசேனையின்
பாதத்தி லணிந்த கிண்கிணிச் சப்தத்தைக் கேட்கும்
பொழுதே எங்கோ பறக்கின்றன ! என் நல் லறிவெல்
லாம் அவளது முகப் பார்வை பட்டவுடனே எங்கோ
ஓடி ஒளிக்கிறதே ! இல்லாவிடின் அவளைச் சிம்மாசனத்
தில், பலரறிய சபையில், எனதருகில், உட்காரவைத்துக்
கொள்வேனோ? இல்லாவிடின் என் சொந்த மனைவியை
அவள் வேசியெனக் கூறவுங் கேட்டிருப்பேனோ?-
ஜகதீசனே ! உலகாளும் என்னை இவள் ஆள்கின்றனளே !
-சீ ! இதென்ன வாழ்வு? எல்லோரும் நகையார்களா?
இனியாவது இவளது வலையிற் படாது தப்பிப் பிழைக்க
வேண்டும் !
[ உட்காருகிறார். ]
வசந்தசேனை மெல்ல
வருகிறாள்.
உன்னை யார் இங்கு வரச்சொன்னது? போ, இனி என்
முன் வரவேண்டாம் !
9
|