வனை. | பிராணநாதா, இனி நான் வரவில்லை. இதுதான் கடைசி முறை நான் இப் புவியில் தம்மைக் கண்ணாற் பார்க்கப் போகிறது. பிராணநாதா, இந்தப் பதினாறு வருஷ கால மாகத் தமக்கு மனைவியாயிருந்ததற்காக இப்பொழுது தான் தம்மை நான் ஒரு வரங் கேட்கிறேன். - என்மீது கருணை புரிந்து இவ் வாளால் என்னைக் கொன்றுவிடும், தமது அழகிய கரத்தால், நான் வேண்டிக்கொள்வது இவ்வளவே ! இதாவது செய்ய லாகாதா?
|
பு. | வசந்தசேனை ! இதென்ன இது?
|
வனை. | பிராணநாதா, நான் இனி உயிர் வாழேன். நான் அறி யாப் பேதமையால் வாய்தவறி ஏதோ குற்றமாகக் கூறிய போதிலும், தாம் என்னைக் கொல்லும்படியாகவாவது கருணைகூர லாகாதா? நான் வாய்தவறி ஏதோ கூறிவிட்ட தற்காக இப்படியும் தண்டிக்கலாமா? பிராணநாதா, இனி அடியாள் இறந்தபின் உம்மை ஏதாவது வேண்டப் போகிறேனோ? இதுவே எனது கடைசி வேண்டுகோள் ! இவ்வளவு மன மிரங்கி என்னைக் கொன்று என் துயரத் தைப் போக்கலாகாதா?
|
பு. | வசந்தசேனை, நீ ஏன் இறக்கவேண்டும்?
|
வனை. | பிராணநாதா, அதற்குக் காரணமுங்கேட்க வேண்டுமோ? இந்த வுடலை நான் தரிப்பதே தமது இன்பத்தின் பொருட்டு ; என்னாள் தமக்குத் துன்பம் நேரிடும் பக்ஷத் தில், இவ்வுடல் இருப்பா னேன்? [ அழுகிறாள். ]
|
பு. | வசந்தசேனை, அழாதே ! அழவேண்டாம் !
|
வனை. | பிராணநாதா, நான் இறப்பதற்காக அழவில்லை. நான் போன பிறகு தமது சுகத்தை யெல்லாம் என்னைப்போல் யார் பார்த்துக்கொள்ளப் போகிறார்களென்றே எனக்குக் கண்ணீர் வருகிறது.
|
பு. | வசந்தசேனை, இறப்பதைக் குறித்து இப்பொழுது யோசிக்கவேண்டியதில்லை. அழாதே ! நான் சொல்வதைக்
|