பக்கம் எண் :

காட்சி-1]மனோஹரன்67

பு.

கேள்! இப்படி உட்கார்-வசந்தசேனை, எதெப்படி
யிருந்தபோதிலும் மனோஹரனையும் பத்மாவதியையும்
நீ அவ்வாறு தூஷிக்கலாமா?

வனை.

பிராணநாதா, நான் தான் ஏதோ வாய் தவறிச் சொல்லி
விட்டேனென்று ஏற்றுக்கொள்ளுகிறேனே !  இன்னு
மென்ன? இவ் வேதனையை அனுபவிப்பதைவிட நான்
இறத்தலே நலம்.

பு.

கண்ணே, போனது போகட்டும். இனி அதைக் குறித்து
வருந்தாதே-இனி நீ இம்மாதிரி ஒருகாலும் கூறமாட்
டாய், எனக்குத் தெரியுமே ;  அழாதே, நான் சொன்ன
படி கேள்.-என்ன சமாசாரம்?

வனை.

ஒன்று மில்லை, பிராணநாதா- களைத் திருக்கிறாற்போல்
இருக்கிறதே ;  காலையில் போஜனங் கொள்ள வில்லையோ?

பு.

இல்லை, கண்ணே.

வனை.

அது ஏனப்படி? நான் ஒரு வேளை பாராவிட்டால் எல்
லாம் கெட்டுப்போய் விடுகிறது. நான் சென்று சித்தஞ்
செய்யச் சொல்லவா?

பு.

வேண்டாம், சற்றுப் பொறுத்துப் போகிறேன்- வசந்த
சேனை, அம்மட்டும் இரண்டுமுறை மனோஹரன் கரத்தி
னின்றும் தப்பிப் பிழைத்தனையே !  நானருகில் இருந்
திராவிடில் நீ இறந்தே யிருப்பாய் ! 

வனை.

அதைப்பற்றி யெல்லாம் இப்பொழுது யோசிப்பானேன்?
பிராணநாதா, திருவையாற்றருகில் நமக்காக ஓர் நூதனத்
துறை கட்டும்படி உத்திரவு செய்திருந்தீரே, அது
முடிந்து போயிற்றா?

பு.

முடிந்துபோய் விட்டது.- மனோஹரன் அருகி லிருக்கும்
பொழுது எப்பொழுதும் நீ மிகவும் ஜாக்கிரதையா
யிருக்கவேண்டும். சற்றும் யோசிக்காமல் என்ன மூடத்
தனமாய் அவனை வேசி மகனென அழைத்தாய் !